பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 37; "என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? நான் அப்படி கினைப்பேன? உங்களுக்கு இருந்த ஆசையைப்பற்றிச் சொல்ல வந்தேன். இப்போது கண்ணன் என் குழந்தை அல்ல; உங்கள் குழந்தை. உங்களிடமே கொடுத்துவிடு கிறேன். அவனல் எனக்கு ஒரு லாபமும் வேண்டாம். அவன் செளக்கியமாக இருந்தால் போதும்.' ராமசாமி கண்ணில் நீர் ததும்பியது. 'அவ்வளவு சுலபமாகச் சொல்லி விடலாமா? குடும்ப விஷயமெல்லாம் எங்கள் வீட்டுக்காரியின் விருப் பத்தைப் பொறுத்தது. அவளேக் கேட்டுச் சொல்கிறேன்' என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் சிவ குமாரன். - மறுநாள் ராமசாமி வந்தான். சிவகுமாரன் விடை யைத் தயாராக வைத்திருந்தான். 'மனிதர்களின் மன சிலே கினைத்ததை கினைத்த அப்போதே செய்துவிட வேண்டுமென்று சொல்வார்கள். அப்போது அந்தக் குழந்தையைப் பார்த்துவந்த புதிதில் ஏதோ அவளுக்குச் சபலமாக இருந்தது. என்ன இருந்தாலும் அயலார் பிள்ளே அயலார் பிள்ளைதானே? சொந்தக் குழந்தை யாகுமா?’ என்று அவள் இப்போது சொல்கிருள். குழந்தை பிறந்து இரண்டு வருஷமாவதற்குள் அம்மாவைக் கொன்று விட்டதே. இங்கே வந்தால் என்ன ஆகுமோ என்று பயப் படுகிருள். இங்கே வந்தபிறகு குழந்தைக்கு ஏதாவது நோய் கொடி வந்தால், உலகம் அதை வளர்த்ததை யெல் லாம் சொல்லாது. குழந்தையில்லாப் ப்ாவிகளுக்கு மற்ற வர்கள் குழந்தையை வளர்க்கத் தெரியவில்லை என்று பொல்லாப்புச் சொல்லும். அது தவிர, அன்றைக்குக் குழந்தையைக் கொடுக்க விரும்பாத சரோஜா இப்போது நம்மிடையே இல்லாவிட்டாலும் இங்கே கடப்பதை அவள்