பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர ஜ ய வ ணி “apzsurgri" என்று கூப்பிட்டார் ஜமீன்தார் முத்தையத் தேவர். 'எசமான்' என்ருர் ஜமீன் மானேஜர். "இனிமேல் ர்ே முதலியாரும் அல்ல; காம் எசமானும் அல்ல." - - முதலியார் சிறிது யோசனையில் ஆழ்ந்தார். "சின்னச் சின்ன ஆசாமிகளெல்லாம் ராஜாவாகவும், மகாராஜாவாகவும் ஆகும்போது நாம் மட்டும் சும்மா இருக்கலாமா? நமக்கு என்ன, சொத்து இல்லேயா, சுகம் இல்லையா? இனிமேல் நாம் மகாராஜா, நீர் நம் மந்திரி. ஆமாம். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இனிமேல் அதற்கு இதற்கு என்று பணத்தைச் செலவு செய்யக் கூடாது. மகாராஜாவுக்கு வேண்டிய அங்கங்களையெல் லாம் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மகாராணியிட மும் இதைச் சொல்லிவைக்கிறேன். அவள் கையென்றும் நட்டென்றும் ஆசைப்பட்டுப் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிருள். அதை நிறுத்திவிட வேண்டும். அப் போதுதானே மகாராணி யாகலாம்? மானேஜர் முதலியார் ஜமீன்தாரைக் கூர்ந்து கவனித் தார். நடுவிலே ஏதாவது பேசில்ை அவருக்குக் கோபம் வந்துவிடும் என்று தெரியும். ஆகவே, 'எசமான்' என்று மாத்திரம் சொன்னர். "சட் என்ன முட்டாள் மந்திரியாக இருக்கிறீர்! இப்போதுதானே சொன்னுேம் நம்மை மகாராஜா என்று