பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - வளைச் செட்டி அழைக்கவேண்டும்; தெரியுமா?"-முதலியாரை முட் டாள்' என்று வைதாலும் மந்திரிப் பதவி கொடுத்ததை மாற்றவில்லை மகாராஜா! "நான் என்ன செய்யவேண்டும் என்று உத்தர வாகிறதோ, அப்படிச் செய்யக் காத்திருக்கிறேன், மகா ராஜா!' - 'சபாஷ்! அதுதான் அழகு. இனிமேல் நம்முடைய ஸ்ம்ஸ்தானம் வையப்பன்பட்டி அல்ல; வையை நாடு. இதற்கு நாம் மகாராஜா, நீர் மந்திரி. இப்போதைக்கு நீரே முதல் மந்திரி, இரண்டாவது மந்திரி, மூன்ருவது மந்திரி எல்லாம். நாளடைவில் மற்ற மந்திரிகளுக்கு ஏற்பாடு ச்ெய்வோம்.' . "எசமான்-இல்ல-மகா ராஜா!' அன்று முதல் வையை நாடு ஸம்ஸ்தானம் உதய மாயிற்று. மகா ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜகுல திலக ராஜ வைபோக முத்தைய ராஜ பூபதி அவர்கள் ஒவ்வொரு நாளும் கொலுவீற்றிருக்கத் தொடங்கினர். அவருக்குத் தங்கத்தால் சிங்காதனம் செய்து அதில் இருந்து ராஜரீகம் நடத்தவேண்டுமென்று ஆசை. ஆனல் ஸம்ஸ்தானத்துப் பொக்கிஷம் அதற்கு இடம் கொடுக்காத தல்ை மரத்தால் சிங்காதனம் அமைத்து அதன்மேல் தங்கமுல்ாம் பூசிய வெள்ளித் தகட்டை மூடிச் சிங்காதனம் அமைத்துக்கொண்டார். அவர் அமைத்துக் கொண்டாரா, என்ன? எல்லாம் மந்திரி மார்க்கசகாய தேவ குலசேகர ராயர் செய்த காரியம். வெறும் முத்தையத் தேவராக இருந்த ஜமீன்தார் ஒரு மூட்டை பட்டத்தைச் சுமக்கும்போது, மந்திரியான மார்க்கசகாய தேவ முதலியா ருக்குமட்டும் பட்டத்துக்குப் பஞ்சமா? அவரும் மார்க்க சகாய தேவ குலசேகர ராயராகிவிட்டார். ... •