பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர ஜ ப வ னி 41 புதிய மகாராஜாவுடைய அறிவின் அளவைப் பழைய முதலியாராகிய புதிய மந்திரி நன்முக அறிந்து கொண்டவர். முழுப் பைத்தியமாக இருந்து விட்டால் அறையில் போட்டுப் பூட்டிவிடலாம். அரைப் பைத்தியமாக இருக் தால் ஏதாவது சிகிச்சை செய்யலாம். இதுவோ கால் பைத்தியம். என்ன செய்வது? சொன்னபடி செய் வதைத் தவிர வேறு வழி இல்லை. ஆளுல் சொன்னபடி செய்கிறதென்ருல், அதற்கு வசதி வேண்டாமா? இருக் கிறதைக் கொண்டுதானே எல்லாம் செய்ய வேண்டும்? பொக்கிஷத்தில் இருக்கும் பணத்தையும் தம்முடைய புத்தி யாகிய செல்வத்தையும் வைத்துக்கொண்டு செய்யவேண்டி யதைச் செய்தார் மந்திரி. அந்த வகையில்தான் சிங்கா தனம் தயாராயிற்று. -- ஒரு நாள் மகாராணி அழைக்கிருரென்று மந்திரிக்கு உத்தரவு வந்தது. அவர் போனுர். அங்கே மகாராணி' முகத்தில் ஈயாடாமல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். மங் திரியைக் கண்டவுடன், 'என்ன முதலியாரே! இதெல் லாம் கன்ருக இல்லையே! இவருக்கு என்ன, பைத்தியம் பிடித்துவிட்டதா? இந்தக் கூத்தெல்லாம் எதற்காக மகா ராணிப் பட்டம் வேண்டும் என்று நான் அழுதே'ை என்று கேட்டாள். . . . 'கான் என்ன மகாராணி, செய்யட்டும்..." என்று ஆர்ம்பித்தார் மந்திரி. , 'அந்த இழவு மகாராணிப் பட்டத்தை விட்டுத் தொலையும். அம்மா என்றே சொல்லும்" என்று அந்த அம்மாள் சீறி விழுந்தாள். - - 'மகாராஜா திடீர் திடீரென்று கினைத்துக் கொண்டு ஏதாவது செய்து விடுகிருர். அவர் மூளையில் இந்த மகா ராஜாப் பித்து பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது.