பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வளைச் செட்டி பகவான்தான் அதை மாற்ற வேண்டும். நான் வேலைக் காரன்தானே? என்னல் என்ன செய்ய முடியும்? நடு நடு வில் முட்டுக் கட்டை போட்டுப் பார்க்கிறேன்." 'அதெல்லாம் கிடக்கட்டும்; இப்போது ஒரு பெரிய விபரீதம் அல்லவா கடக்கும் போல இருக்கிறது? இவர் என்னை மகாராணி யாக்கிவிட்டாராம். நான்தான் பட்ட மகிஷியாம். மகாராஜா வென்ருல் ஒரு ராணி இருந்தால் போதாதாம். குறைந்த பட்சம் நாலு பேராவது இருக்க வேண்டுமாம். அந்த காலு பேருக்கும் நான் தலைவியாகமகாராணியாக-இருக்க வேண்டுமாம்! இந்தக் கூத்தை யாளிடம் போய்ச் சொல்கிறது?" என்று அந்த அம்மாள் சொன்னுள். - "அப்படியா சமாசாரம்? என்வரைக்கும் அந்த விஷயம் வரவில்லை. வந்தால் ஏதாவது சமாதானம் சொல் லிப் பார்க்கிறேன். ஆனல் நிச்சயமாகச் சொல்ல முடி யாது. சரி, நான் வருகிறேன்." மந்திரி புறப்பட்டுவிட்டார். அடுத்த நாள் மகாராஜா மந்திரியிடம் தமக்கு இன் னும் மூன்று தேவிமார்களைக் கல்யாணம் செய்துகொள் ளும் உத்தேசம் இருப்பதைத் தெரிவித்தார். மந்திரி பேச ஆரம்பித்தார்: "மகாராஜாவிடம் சில முக்கியமான விஷயங்களை விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். நம்முடைய ராஜ்யம் இப்போதுதான் உதயமாகி யிருக் கிறது. இதற்கு வேண்டிய அங்கங்களை யெல்லாம் ஒரே யடியாகச் சேகரித்துக்கொள்ள முடியாது. ராணிமார் கள் நாலு பேராவது இருந்தால்தான் மகாராஜாவின் ராஜ வைபவம் சிறப்பாக இருக்கும். தசரத சக்ரவர்த்தி அறு பதியிைரம் ராணிகளுடன் இருந்தாராம். ஆனல் அதற்கு முன் ராணிகளுக்கு ஏற்றபடி அந்தப்புரம் கட்டவேண்டும்.