பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா ஜ ப வ னி 43: இப்போது மகாராஜாவுக்கு ஐம்பது வயசு ஆகிறது. இந்த வயசில் இளம் வயசு ராணிகளேக் கல்யாணம் செய்து கொண்டால் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வரவேண் டும்.' - * 'சபாஷ் மந்திரி, உம்முடைய புத்தியை மெச்சி ளுேம்." - "ஆகையால் தக்க பாதுகாப்புள்ள அந்தப்புரத்தை யும் அதற்கு ஏற்ற காவலாளர்களேயும் ஏற்படுத்தின. பிறகே ராணிமார்களைக் கொண்டு வரவேண்டும். பழைய காலத் தில் அந்தப்புரத்தில் ஆண்களைக் காவல் வைப்பதில்லை. பெண்கள் காவலுக்குத் தகுதி யில்லாதவர்கள். அலிகளேத் தான் காவலாக வைத்திருந்தார்கள்.' "அப்படியா? இந்த விஷயம் எனக்குத் தெரி யாதே!' "மகாராஜா பழைய சரித்திரங்களே வாசித்தால் இது தெரியவரும். அலிகள் அந்தப்புரங்களில் இருந்தார்கள். ஆகவே ராணிகளைத் தேடிப் பிடிப்பதற்கு முன்னலே அலி களைத் தேடிப் பிடித்துக் காவலாளராக நியமிக்கவேண்டும். சிலரைப் பணியாளராகவும் நியமிக்கலாம்.” "சரி, அப்படியே செய்துவிடுகிறது” என்ருர் மகா ராஜா. * 'இதெல்லாம் அரண்மனைக்குள்ளே நடக்கிற விஷயம். பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் வெளிப்படை யாக நாலு பேர் கண்முன்னலே மகாராஜா சிறப்பாக இருக்கவேண்டும். ராஜ சின்னங்களெல்லாம் அமைத்துக் கொள்ளவேண்டும்.' - 'மகாராஜ சின்னம் என்று சொல்லும்” என்று திருத்தினர் மகாராஜா.