பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வளைச் செட்டி 'முதலில் செய்யவேண்டியது நிறைவேறிவிட்டது. சிங்காதனம் அற்புதமாக அமைந்து விட்டது. இனிமேல் வாகனங்களைத் தயார் செய்யவேண்டும்.” "என்ன என்ன வாகனம் வேண்டும்?” என்று கேட்டார் மகாராஜா. 'பழைய காலத்தில் அரசர்களிடம் ரத கஜ துரக பதாதிகள் ஆகிய நான்கு படைகள் இருந்தன. கொடி, மாலை, திருச்சின்னம், கிரீடம் முதலிய அடையாளங்கள் இருந்தன. பட்டத்து யானே இருந்தது. அரசருக்கென்று தனியே குதிரை இருந்தது. இவற்றை யெல்லாம் ஒவ் வொன்ருகத் தேடிச் சேர்த்துக்கொண்ட பிறகு அந்தப் புரத்து விஷயத்தைக் கவனிக்கலாம். மகாராஜா என்ருல் பல மந்திரிகள் வேண்டும். ஆனலும் இப்போதைக்கு நான் மாத்திரம் இருக்கிறது போல, மகாராஜாவுக்கு இப் போதைக்கு மகாராணி இருந்தால் போதும்.' "பின்னே, இப்போது எதைச் செய்வது' என்று கேட்டார் மகாராஜா. - "மகாராஜாவுக்கு அதைத்தான் சொல்ல வருகிறேன். ரத கஜ துரக பதாதிகளாகிய படைகள் வேண்டும். ஆனல் அவைகளுக்கு இப்போது அவசரம் இல்லை. நாம் எந்த நாட்டோடும் சண்டை செய்யப் போகிறதில்லை." "ஆலுைம் அந்தஸ்து வேண்டாமா?" ‘'வேண்டியதுதான். அவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் வாகனங்களை வாங்கலாம் என்று தோன்றுகிறது. குதிரை, யானே என்ற இரண்டையும் வாங்கில்ை பிறகு மற்ற மகாராஜ சின்னங்களே வாங்கலாம். குதிரையை முதலில் வாங்கலாமா? யானையை வாங்க லாமா? மகாராஜாவின் திருவுள்ளக் குறிப்பை அறிந்து மேற்கொண்டு ஏற்பாடு செய்யவேண்டும்.”