பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர ஜ ப வணி 45 மகாராஜா சற்று யோசனை செய்தார். "இரண்டும் வேண்டியதுதான். ஆனால் குதிரை என்ன, பெரிய விஷயமா? சாமானிய ஆசாமி யெல்லாம் குதிரை வைத்திருக்கிருன். முதலில் யானேதான் வாங்கவேண் டும்” என்று உற்சாகத்தோடு சொன்னர். 'மகாராஜா தம்முடைய ராஜ வைபவத்திற்கு ஏற்ற படியே கம்பீரமாக எண்ணமிடுவதைக் கேட்க எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. மகாராஜா அற்ப சொற்பமா னதையே சினேக்கிறதில்லை. சரி, உத்தரவுப்படியே யானே வாங்க ஏற்பாடு செய்கிறேன்.' இவ்வாறு அன்றைய மந்திராலோசனை முடிந்தது. மங் திரி, "ராணிமார்கள் இப்போதைக்கு வரமாட்டார்கள். அந்த விஷயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று மகாராணிக்குச் சொல்லி ஆறுதல் உண்டாக்கினர். மற்ருெரு நாள் மந்திராலோசனை நடந்தது. மகா ராஜாவும் மந்திரி மார்க்க சகாய தேவ குலசேகர ராயரும் பேசிக்கொண்டிருந்தனர். . . . - 'என்ன மந்திரி, யானை வாங்கும் விஷயம் எப்படி இருக்கிறது?’ என்று மகாராஜா விசாரித்தார். மலையாளத்தில்தான் யானே வாங்கவேண்டும். யான விலையை விசாரித்தேன். இரண்டாயிரம் மூவாயிரம் பொன் கொடுத்தால்தான் கிடைக்கும். மகாராஜாவின் குளங் களுக்குத் துருவெடுத்த செலவு இந்த வருஷம் எதிர்பாரா மல் அதிகமாகிவிட்டது. ஆகவே, யானேவாங்கப் பணம் தேருகென்று தெரிகிறது." - * * "என்ன! மூவாயிரம் பொன் தேருதா? என்ன, இது வேடிக்கையாக இருக்கிறதே!" - - - "மற்றச் செலவுகளுக்கெல்லாம் பணத்தை வைத்துக் கொண்டல்லவா யானைக்குச் செலவு செய்ய வேண்டும்?