பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வளைச் செட்டி மகாராஜா அந்தப்புரத்தைப் பற்றிச் சொன்னது ஞாபகம் இல்லையா? அந்தப்புரம் கட்டவும், ராணிமாரைக் கல்யா .ணம் பண்ணவும் பணம் ஒதுக்கி வைக்கவேண்டும் அல் லவா? அதுதானே முக்கியமான காரியம்? அதற்கு முன் ஞலே அங்கமாகச் செய்யவேண்டியதுதானே இதெல்லாம்? அந்தப் பணத்தை இதற்குச் செலவழித்து விட்டால் நாளைக்கு ராணிமார் மாலேயும் கையுமாக நிற்கிறபோது மகாராஜா பணம் இல்லையென்று அவர்களுக்கு முன் விழிக்கலாமா?" - மகாராஜா அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டார். மீசையைக் கோதினர். "சே சே! அப்படி ஏமாந்து போகலாமா? முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்' என்ருர். "இத்தனையையும் யோசனை செய்து பார்த்தால் யானையே வாங்க வேண்டாம் என்று தோன்றுகிறது. ஆனல் யானே இல்லாமல் மகாராஜ சின்னம் பூர்த்தியாகாது.' 'என்னதான் செய்யப்போகிறீர்?" என்று ஆவலுடன் கேட்டார் மகாராஜா. - "கடவுளேக் காட்டிலும் பெரியவர் ஒருவர் இல்லை. எல்லா மகாராஜாக்களுக்கும் மேலான மகாராஜா அவர். அவருக்குப் பல வாகனங்கள் உண்டு. அவருக்கும் யானே உண்டு. மன்னர்களும் கடவுளுக்குச் சமானம் என்று சொல்வார்கள். ஆகையால் கடவுள் எழுந்தருளும் யானை .யைப்போல ஒரு யானேயை மகாராஜாவுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றுகிறது." மகாராஜா மந்திரியின் கருத்தைப் புரிந்து கொள்ள வில்லை. 'எப்படி ஏற்பாடு செய்வீர்?" என்று கேட்டார். 'ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. மலையாளத்து யானைகளேப்பற்றி விசாரித்தேன். யானேக்கு அகாத விலை