பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சா ஜ ப வ ணி 4? கேட்கிருர்கள். போனல் போகிறது என்று பார்த்தால் அதைக் காப்பாற்றுவது என்பது மகா கஷ்டமாம். காட் டிலே வாழும் யானையை இங்கே கொண்டுவந்தால் அதற்கு மதம் உண்டாகிவிடுமாம். போனமாசங்கூட ஒரு கோவில் யானைக்கு மதம் உண்டாகி ஊரையே அழித்துவிட்டதாம்." y? "பிறகு......... o - 'பிறகு என்ன? ஊரெல்லாம் சேர்ந்து அதை அழித்து விட்டார்கள். நாம் யானே வாங்கினுேமானல் யானேயின் மேல் மகாராஜா ஏறி ஊர்வலம் வரவேண்டும். அது மிக வும் அபாயமானது. நான் அதற்குச் சம்மதித்தாலும் மகா ராணி சம்மதிக்கவே மாட்டார்கள்." ஆமாம், அவளுக்கு எப்போதும் கோழை மனசுதான்" என்று தம் மனைவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டார் ஜமீன்தார். . 'நம்முடைய ராஜ்யத்திலுள்ள குடிகளும் மகாராஜா யானையின்மேல் ஏறக்கூடா தென்றுதான் சொல்வார்கள். ஏருமல் இருப்பதால்ை யானை எதற்கு? அதை வாங்கிக் கட்டிக்கொண்டு தீனிபோடுவதில் யாருக்குச் சுகம்? அந்தத் தீனிச் செலவு வேறு இருக்கிறது. ஆகையால் கான் ஒரு யோசனையை மகாராஜாவிடம் தெரியப் படுத்த விரும்பு கிறேன்." "என்ன? சட்டென்று சொல்லும்."

யானே மாதிரியே, ஏன், யானையைப்போல இரண் டத்தனே பெரிதாக, நல்ல மரத்தால் ஒரு வாகனம் பண்ணி அதன்மேல் மகாராஜாவை ஏற்றிப் பவனிவரச் செய்யலாம் என்று தோன்றுகிறது."