பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ ப வ னி 49 விருந்து இந்தப் பைத்தியக்கார ஜமீன்தாரைப் பார்க்கப் பலர் வந்திருந்தார்கள். வாண வேடிக்கையும் கடந்தது. யானே வாகனத்தின்மேல் மகாராஜாவும், மகாராணி யும் ஏறிக்கொண் டிருந்தார்கள். அதை இழுத்துவரும் போது மேடு பள்ளங்களில் அவர்கள் உடம்பு குலுங்கியது. மகாராணி இடுங்கினுள். கீழே குதித்துவிட முடியாது. மிகவும் உயரமானதல்லவா? ஏறும்போது ஏணி வைத்து ஏறினர்கள். மகாராஜாவும் யானேயின்மேல் உட்கார முடி யாமல் தவித்தார். ஓரிடத்தில் சிறிது பள்ளமாக இருந்தது. அங்கே யானேயை இழுத்துப் போகும்போது நொடித்தது. மகாராணி பயத்தில்ை மகாராஜாவைக் கட்டிக் கொண்டாள். அவரும் அவளேக் கட்டிக்கொண்டார். ஜனங்கள் அதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தார்கள். மகாராணி, "போதுமே உங்கள் பவனி என் மானம் போகிறது. என்னேக் கீழே இறக்கி விடுங்கள்' என்று கத்தினுள். இறக்கி விடாவிவிட்டால் கீழே குதித்துக் கால முறித்துக்கொள்வாள் என்று பயமாகப் போய்விட்டது. மகாராஜா சுற்று முற்றும் பார்த்தார். எல்லோரும் சிரித்தார்கள். அப்போதுதான் அவருக்கு உறைத்தது. அவமானமும் தோன்றியது. 'முதலியாரே!” என்று கத்தினர். மந்திரி வந்தார். "கொண்டுவாரும் ஏணியை!” என்று உத்தரவிட்டார். அவர் தயாராக வைத்திருந்த ஏணியைக் கொண்டு வந்தார். ஐந்து கிமிஷத்தில் ஊர்வலம் கலந்தது. - ★ "முதலியாரே! அந்த யானையை என்ன செய்திர்? என்று கேட்டார் ஜமீன்தார். • . வ-செ-4