பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே குடும்பம் குத்தங்குடி வட்டாரத்தில் வேலாயுதம் என்ற பெய ரைச் சொன்னல் போதும், வாயை மூடிக்கொண்டிருந்த குழந்தை அழ ஆரம்பிக்கும். சின்ன வயசிலிருந்தே அடங்காப் பிடாரியாக இருந்த வேலாயுதத்துக்கு எப் போதுமே முரட்டுத்தனம் அதிகம். அந்தக் காலத்தி லெல்லாம் அவனுக்கு முரட்டு வேலாயுதம் என்ற பெயரே பிரசித்தமாக வழங்கியது. யாரோடு பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாகவே இருப்பான். வேளேக்கு இரண்டு சண்டையைக் கொண்டு வராவிட்டால் அவனுக் குப் பொழுதே போகாது. அவனுக்குப் படிப்பு எங்கே வரும் ஏதோ நாலு பாரம் வரையில் பேருக்குப் படித்தான்; அவ்வளவுதான். அதற் குள் அவன் இருந்த வகுப்புப் பலகைகளெல்லாம் குழிந்து போயின. அவனுடைய தகப்பளுர் சின்ன வெற்றிலை பாக்குக் கடை வைத்துப் பிழைத்தவர். அதில் என்ன, ஆயிரம் ஐந்நூரு லாபம் வந்துவிடப் போகிறது? கிடைத் ததை வைத்துக் கொண்டு மானமாய்ப் பிழைத்து வந்தார். உண்டிக் கலயத்தில் காசு போடுகிறது போல எண்ணி அவனேப் படிக்க வைத்தார். அது என்னடாவென்ருல் ஒட்டைக் கலயமாக இருந்தது. ஒரு விதமாகப் பள்ளிக் கூடத்துக்குத் தலே முழுகி விட்டு உத்தியோகம் செய்யப் புகுந்தான். அவனுக்குத் தாசில் உத்தியோகமா கிடைக்கும்? அவன் தகப்பன ருடைய யோக்கியப் பொறுப்பைத் தெரிந்து கொண்டி ருந்த பாலகுரு செட்டியார் தம் ஜவுளிக் கடையில் அவனே