பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 - வளைச் செட்டி அமர்த்திக் கொண்டார். மாசம் எட்டு ரூபாய்ச் சம்பளக் தான். ஆலுைம் அந்த வேலையையாவது ஒழுங்காகச் செய்து வந்தால் போதும் என்று அவன் தகப்பனர் கினைத்தார். வேலாயுதத்துக்கு இந்த முழம் போடுகிற வேலை பிடிக்கவில்லை. ஜவுளிக் கடையில் இருந்த தையல்காரர் மதார் சாஹிபோடு சிநேகம் செய்து கொண்டு தையல் வேலையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண் டான். தனியாக ஒரு தையல் யந்திரம் வாங்கித் தொழில் நடத்த வேண்டும் என்ற சுதந்தர உணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. பணத்துக்கு எங்கே போவது? கடையில் வேலையைக் கவனிக்காமல், தையல் யந்திரத்தின் அடியிலே அறுபது நாழிகையும் கிடந்தால் சம்பளம் கொடுக்கிறவர் சும்மா இருப்பாரா? 'தம்பி, வேலாயுதம், நீ ஜவுளிக் கடைக்கு லாயக்கில்லே. இரும்புப் பட்டறைக்குத்தான் லாயக்கு’ என்று சொல்லிவிட்டார். செட்டியார் சொன்ன வாக்கு ஒருவாறு பலித்து விட்டது. அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் ஊரை விட்டு ஓடிப்போன வேலாயுதம் இப்போது ஓர் ஆலைத் தொழிலாளியாக இருக்கிருன். தினத்துக்கு ஒன்றரை ரூபாய் சம்பளம். குத்தங் குடியில் சொக்கநாதர் ஆலையில் மூவாயிரம் தொழிலாளிகள் வேலை செய்தார்கள். தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தொழிலாளிகள் வந்து அதில் அமர்ந்திருந்தார்கள். வேலாயுதம் வாயடி கையடி அடிப்பதில் கெட்டிக் காரன். அவன் இருக்கும் இடத்துக்கு விளம்பரமே வேண்டாம். அவனுடைய சேஷ்டைகளே அவனே வெளிப்படுத்திவிடும். அரை கிமிஷம் சும்மா இருக்கச் சொல்லுங்கள்: அவனல் முடியவே முடியாது. அவனே எப்போதும் தனியே பார்ப்பது அரிது. நாலு பேரோடு