பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே குடும்பம் 53 கூடிக் கூத்தடித்துக் கொண்டே இருப்பான். மூவாயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேரும் இடத்தில் அவனுக்கு ஜமாவுக்கு என்ன குறைச்சல்? - அவன் தகப்பனரும் தாயாரும் தம்முடைய பிள்ளே ஜீவனத்துக்கு வழி தேடிக்கொண்டதை அறிந்த திருப்தி யோடு கண்ணே மூடிக்கொண்டார்கள். அவனுடைய மாமன் தன் மகளே அவனுக்குக் கல்யாணம் செய்துகொடுத் தான். இப்போது வேலாயுதம் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து வந்தான். பள்ளிக்கூடப் படிப்பு அவன் மண்டையில் ஏற வில்லையே ஒழிய அவனுடைய புத்திசாலித் தனத்துக்குக் குறைவில்லை. எப்போதும் சளசள வென்று பேசின. பழக் கமோ, அல்லது வாய்ச் சண்டை போட்டதன் பயனே ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்து வாதம் செய்ய ஆரம் பித்தால், எதிராளியின் பலவினங்களை ஒன்றன் மேல் ஒன்ருக அடுக்கிக்கொண்டே போவான். கிண்டல், பரி காசம், தொனியை மாற்றிப் பேசுதல்-இந்தத் தந்திரங்க ளெல்லாம் அவனுக்குத் தெரியும். இத்தனை சக்தியை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? தொழிலாளர் சங்கம் நிறுவினன். அவனே தலைவனைன். முதலில் தொழிலாளர் சங்கம் தொழிலாளர் அறிவு விளக்கத்தைக் கருதித்தான் ஆரம்பமாயிற்று. அதற்குப் பேர்கூட ஏதோ கல்வி என்றும் கல்ேயென்றும் சொல்வார் களே, அப்படி இருந்தது. பிறகு தொழிலாளர்களுடைய நன்மைகளைக் கவனிக்க வேண்டும் என்ற கொள்கையைச் சங்கம் தீவிரமாகக் கடைப்பிடித்தது. அது முதல் அது தொழிலாளர் சங்கம் என்ற நாமத்தைப் பெற்றது. அகில உலகத் தொழிலாளர் சபைகளைப் பற்றிப் பத்திரிகைகளில் வருவனவற்றை ஒன்று விடாமல் படித்