பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வளைச் செட்டி தான் வேலாயுதம். அவன் இப்போது பேச்சிலே கெட்டிக்காரன் என்ற பேர் வாங்கிவிட்டான். யார் என்ன பேசிலுைம் நேர்முகமாகவோ கிண்டலாகவோ மறுத்துப் பேசுவான். ஆகவே தொழிலாளர் கலங்களைப் பற்றிய அவ துடைய பேச்சில் முதலாளிகளின் சுயநலக் கண்டனமே அதிகமாக இருக்கும். அந்த ஆலே முதலாளியைப் பற்றிக் குறிப்பிட்டு ஒன்றும் சொல்லாவிட்டாலும், பொதுப்படப் பகற்கொள்ளேக்காரர்க ளென்றும், பி ற ர் உழைப்பில் வாழ்கிறவர்க ளென்றும் முதலாளிகளேத் துாஷிப்பதில் அவன் வல்லவனுக இருந்தான். அவனுடைய காரசார மான பேச்சில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அத்தனைபேரும் அவனே மிகவும் பெரிய தலைவனுகவே எண்ணத் தலைப்பட்ட னர். அவனுடைய பேச்சின் உணர்ச்சி, வேறு சிலர் உள்ளங்களிலே ஊறி அவர்களிடத்திலும் புரட்சி ஊற்றைக் கிளப்பியது. அதனல் சில குட்டித் தலைவர் களும் கிளம்பினர்கள். ஆலே முதலாளி இந்தச் சங்க வளர்ச்சியிலே முதலில் அத்தனை கவனம் செலுத்தவில்லை. கூடிய வரையில் தொழிலாளர்களின் நலத்தைக் கவனித்து ஒரு குடும்பம் போல் கடத்த வேண்டும் என்ற கொள்கை உடையவ ராகையால் தொழில் தகராறு ஒன்றும் ஏற்பட வழியில்லா மல் இருந்தது. அவருக்குப் போதாத காலமென்றுதான் சொல்ல வேண்டும்; இந்தத் தொழிற் சங்கத்தைக் கண்டு ஏதோ சந்தேகம் அவர் உள்ளத்திலே புகுந்துகொண்டது. ஜாடை மாடையாக அதைப்பற்றிக் கொஞ்சம் தாழ்வாகப் பேசத் தொடங்கினர். அது நெருப்புப் பொறிபோலப் பற்றிக் கொண்டது. 'முதலாளி வர்க்கம் எல்லாம் ஒரு ஜாதி