பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே குடும்பம் 55 தான். பாம்புக் குட்டியில் நல்லதென்றும் கெட்டதென் றும் வேறு பிரித்துச் சொல்ல முடியுமா?" என்று உப மான உபமேயங்களுடன் வேலாயுதம் வீட்டிலே பேசிக் கொண்டிருந்தான். பிறகு வீதியிலே பேசினன். மேடையி லும் பேசும்படியாகிவிட்டது. - ஒரு சின்னசமாசாரம்: ஒரு தொழிலாளி அவசரமாகப் பக்கத்து ஊருக்குப் போய் வந்தான்; அரை நாள் வேலைக்கு வரவில்லை. முன்பெல்லாம் இதைப்பற்றி யாரும் கவனிக்க மாட்டார்கள். இப்போது முதலாளி காதுக்கு இது எட்டி யது. அவர் மனசுக்குள்ளும் புகுந்து கொண்டது. முன்பே இருந்த சந்தேகமும் சேர்ந்தது. "பயல்கள் ஏதோ சூழ்ச்சி பண்ணுகிருர்கள்” என்று எண்ணினர். இந்த எண்ணத்துக்கு ஒத்து ஊதச் சில மந்திரிமார்களும் சேர்க் தார்கள். நேரடியாக எதையும் கவனித்துச் செய்து வந்த முதலாளி இப்போது மத்தியஸ்தர்களையும் மானேஜரையும் கொண்டு விவகாரம் பேசும் கிலே வந்துவிட்டது. தொழி லாளிக்குச் சம்பளப் பிடித்தம் செய்யும்படி உத்தரவு பிறந்தது. - . 2 அமைதியான குளத்தில் சிறிய கல்லைப் போட்டா லும் அலே கிளம்பும். அந்த அலைகள் காலு பக்கமும் பரவுமேயொழிய ஒரு பக்கமாக மாத்திரம் பரவுவதென்ப தில்லை. முதலாளி மனசு வேறு பட்டதால் அமைதிக்கே பங்கம் வந்துவிட்டது. தொழிலாளிகளிடையும் கசமுசல் ஏற்பட்டது. “முதலாளி வர்க்கமே பொல்லாதது” என்று ஆரம்பித்த பிரசாரம், "இந்த முதலாளி மட்டும் என்ன வாழ்ந்தார்?' என்ற வாலையும் சேர்த்துக் கொண்ட்து. சந்தேகம் என்று ஆரம்பித்தால் அதற்கு