பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - வளைச் செட்டி எல்லாமே அநுகூலமாகத் தோன்றும். தொழிலாளிகள் பொறுப்புணர்ச்சி யில்லாமல் ஏமாற்றப் பார்க்கிருர்கள் என்ற கருத்து முதலாளிக்கு வேரூன்றியது. தொழி லாளிகளுக்கோ முதலாளி மனப்பான்மையும், அடக்கு முறையாசையும் அவருக்கு வந்துவிட்டன என்று தோன்றியது. பிறகு சட்டதிட்டங்கள், விதிகள், விலக்குகள், சம்பிரதாயங்கள், உரிமைகள், கடமைகள் என்றெல்லாம் இரு சாராரிடத்தும் வார்த்தைகளும் வாதங் களும் எழுந்தன. தொழிலாளர்களிடையே கிளர்ச்சியை வளர்க்க வேலாயுதம் ஏற்பட்டான். சும்மா மெல்லும் வாய்க்கு அவல் வேறு கிடைத்துவிட்டது. கெருப்பைக் கக்கும் பிரசங்கங்களை அவன் கக்கினன். தொழிலாளர்களிலே சிலருக்கு இந்தக் கிளர்ச்சி அவ்வளவாகப் பிடிக்கவில்லை. வயசான ஆசாமிகள் பட்டும் படாமலும் இருந்தார்கள். இளவட்டங்கள் மாத்திரம் துடிதுடித்துக் கொண்டிருங் தனர். வழக்கமாகக் கொடுக்கும் பஞ்சப்படி போதா தென்ற ஒரு விஷயத்தை முன்னிட்டுக் கொண்டு போராட் டம் ஆரம்பமாயிற்று. - எல்லாம் கிரமமான போக்கிலே போயிருந்தால் இங் தப் பஞ்சப்படி இரண்டு மாசங்களுக்கு முன்பே கிட்ைத் திருக்கும். அதற்குத்தான் தடை வந்துவிட்டதே ! 'கணக்குப் பார்க்கிருேம்' என்றும், "அதிக லாபம் இல்லை' என்றும் முதலாளி சமாதானம் கூறினர். தொழி லாளர் கூட்டத்தில், 'பொய்க் கணக்குத் தயாராகிறது” என்றும், "திருட்டு லாபம் அதிகம்' என்றும் பிரசாரம் கடந்தது. போனஸ் வேறு கொடுக்க வேண்டும் என்ற ஒரு புதிய விஷயத்தைத் தொழிலாளர் சேர்த்துக்கொண் டார்கள். - .