பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே குடும்பம் . . 57 றிேவிட்டு ஆற்ற வேண்டிய புண் அடிப்பாரம் போட்டுக்கொண்டு கிளம்பிப் புரையும் ஓடியது. வேறு ஊர்களிலிருந்து தொழிலாளர்களுக்காகச் சேவை செய்யக் கங்கணம் கட்டிக் கொண்ட தலைவர்கள் வந்தார்கள். உள்ளுருக்குள்ள்ே இருந்த விவகாரம் இப்போது அயலூருக்கும் எட்டிப் பத்திரிகைகளிலும் இடம் பிடித்துக் கொண்டது. தொழிலாளர் கட்சிக்குப் பிரசார பலம் வரவரப் பெருகியது. முதலாளி கட்சியில் ஆத்திரமும், குண்டுணிகளின் உபதேசமும் பலமாயின. அயலார் வந்து உள்ளூர் விவகாரத்தில் தலையிடுவது முதலாளிக்குப் பிடிக்கவில்லை. ஆனல் அயலார் தம் காதில் வந்து ஒதும் மந்திரங்களே மாத்திரம் உற்சாகமாகக் கேட் டார். இதற்கென்றே பிறந்த அவதாரங்கள், இங்கிருப் பதை அங்கே சொல்லியும் அங்கிருப்பதை இங்கே சொல்லி யும் பிழைத்து வந்தார்கள். - இந்த மனக் கசப்பு வளர்ந்து வந்தது. முதலாளி சில தொழிலாளர்களை வேலையை விட்டு எடுத்தார். ஆலையில் உற்பத்தி குறைந்தது. மனசில்லாமல வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் இருக்க நியாயம் இல்லை; பிறகு உற் பத்தியிலும் இழுபறி ஏற்படுவதுதான் இயல்பு. முதலாளி கணக்குப் பார்க்க ஆரம்பித்தார். பணச் செலவு அதிகமாகிறதே ஒழியப் போன மாசம் நடந்த வேலே இந்த மாசம் கடக்க வில்லையே' என்று அங்க லாய்த்தார். இந்தப் பயல்கள் தம்மையே நாம் கம்பி யிருப்பதாக எண்ணித் தலையாட்டம் போடுகிருர்கள். அய லூரிலிருந்து அதிகப் பணம் கொடுத்தாவது ஆளே வரு வித்தால் இவர்கள் கொட்டம் தானே அடங்கும். மூன் ரும் பேருக்குத் தெரியாமல் மாசம் ஆனவுடன் பசுக் கறந்தாற்போலச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு விசுவாச