பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 --- வளைச் செட்டி வியாதி கடுமையானதென்று தெரிந்தவுடனே அதற் குப் பரிகாரம் தேடுவதிலே அவன் கவலே சென்றது. யாரை அணுகுவது? தொழிலாளரிடையே ஒரு வகைத் தியை வேறு மூட்டியாயிற்று. வேலை கிறுத்தமும் ஆரம்ப மாகிவிட்டது. எதைக் கவனிப்பது? எதை விடுவது? நல்ல வேளேயாகச் சில உற்சாகமுள்ள இளைஞர்கள் தொழி லாளர் சங்கத்தை கடத்தும் சக்தியுடையவர்களாக இருக் தார்கள். அதனல் தன் மனைவியைக் கவனிக்கத் தொடங் கின்ை. அவளுக்கு வந்த குறிப்பிட்ட வியாதிக்கு யாரா வது நிபுணரால்தான் சிகிச்சை செய்யமுடியும் என்றும் தெரியவந்தது. இத்தகைய சங்கடமான கிலேயில் தற்செயலாக அன்று அந்த டாக்டரைச் சக்தித்தான். அவரைப்பற்றி மற்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்குமுன் அவர் ஒரு டாக்டர் என்ற செய்தி தெரிந்தது. மேலே அவன் ஒன்றும் கேட்காமல் தன் மனைவியின் வியாதியைப்பற்றிச் சொல்லி அதைக் கவனிக்கும் விபுணர் யாராவது கிடைப்பார்களா என்று கேட்டான். இந்த உலகமே அவன் கினேவில் இல்லை. மனேவிக்குச் செளக்கியமானுல் போதும் என்ற ஒரே கினேவுதான். டாக்டரே, குறிப்பிட்ட வியாதியைக் கவனிக்கும் நிபுணராக இருந்தார். எல்லாம் ஒத்துக்கொள்ளவே அவரே சிகிச்சை செய்ய ஆரம்பித்தார். அவர் சிகிச்சை செய்வதுகூடப் பிறருக்குத் தெரியாமல் இருக்தது. தெரியக்கூடாதென்று எண்ணி யவர் அவர். ஒய்வு எடுத்துக்கொள்ள வந்த இடத்தில் தொழில் கடத்த அவருக்கு விருப்பம் இல்லை. வேலாயுதத் தின் மனைவியுடைய கிலே பரிதாபமாக இருந்தமையால், எப்படியோ அவளுக்கு மாத்திரம் சிகிச்சை செய்ய ஒப்புக் கொண்டார். - . . . .