பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வளைச் செட்டி ஒருவன் அடித்தான்” என்று சிறிது நேரத்துக்குப் பிறகு டாக்டர் சொன்னர். வேலாயுதம் காதில் இது விழுந்தது. 'ஆ'-அவன் ஸ்தம்பித்துப் போனன். 'கலேப்பதா? மித்திரபேதமா? கடவுளே! என்ன இது' என்று அவன் கூவினன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது. தொழிலாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதை ஊகித்துக் கொண்டான். "ஆம், அவர்கள் தங்கள் ஆவேசத்தில் அப் படித்தான் வினைப்பார்கள். சந்தர்ப்பங்கள் சேர்ந்துகொண் டன. ஆவேசத்தை மூட்டினவன் நான்தான். இடையே அறிவுக்கும் அன்புக்கும் வேலையில்லாமல் செய்துவிட் டேன். வேலை நிறுத்தம் வந்தபிறகு பட்டினியால் அவர்கள் வயிறு வாடுகிறது. அதல்ை ஆத்திரம் உண்டாவது இயல்பு...முதலாளி அழைத்தபோது போகாமல் இருக் தேனே! அது என் அறிவைக் காட்டுகிறதா! ஆத்திரத் தைத்தானே காட்டுகிறது? வெறும் வெறியைக் கிளப்பி விட்ட நானல்லவோ எல்லாவற்றிற்கும் மூலகாரணம்? இந்த வெறியென்னும் பேய் தன்னைப் பெற்ற என்னையே சந்தேகிக்கும்படி செய்துவிட்டது. எனக்கு உபகாரம் செய்த இந்தப் பெரியவருக்கு இந்த அபாயம் ஏற் பட்டது. இதை உணர அவர்களுக்கு அறிவில்லை; எனக்கே இதுவரையிலும் இல்லையே! அவனவன் துயர்க் கடலுள் ஆழ்ந்திருக்கும்போதுதான் உண்மை புலப் படும். நான் தூண்டிவிட்ட தீ இப்போது என் நெஞ் சையே சுடுகிறது. ஹாம்! நான் படவேண்டிய கஷ் ட்த்தை இந்த மகாதுபாவர் படும்படியாக அல்லவோ செய்துவிட்டேன்!-இன்னும் என்ன என்னவோ அவன் உள்ளத்தில் ஓடின. பேசாமல் இடி விழுந்தாற்போல் உட்கார்ந்துவிட்டான். கண்களில் தாரை தாரையாக நீர்