பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே குடும்பம் 8? வழிந்தோடியது. டாக்டர் பேசாமல் படுத்தபடியே பார்த் துக்கொண்டிருந்தார். . . . திடீரென்று வேலாயுதம் எழுந்திருந்தான். நீங்கள் என் மனைவியின் உடல் நோயைப் போக்கி உயிர் அளித் திர்கள். அப்படியே என் உள்ளத்தில் இருந்த அறியாமை யையும் போக்கிவிட்டீர்கள். நாளைக்கு நீங்கள் முதலா ளிக்கு ஒரு கடிதம் எழுதித் தந்து எனக்குப் பேட்டியளிக் கும்படி செய்யவேண்டும்" என்று அவர் காலத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டான். 6 மறுநாள் விடிந்தவுடன் முதலாளியை வேலாயுதம் கண்டான். அவரும் இந்தச் சக்தர்ப்பத்தை எதிர்பார்த் துக்கொண்டிருந்தார். அவனேக் கண்டவுடன், 'என் னப்பா வேலாயுதம், வெகு தூரத்துக்குச் சங்கடத்தைக் கொண்டுவந்து விட்டாயே! பைத்தியக்காரத்தனமாக அல்லவோ உலகம் எண்ணும்படி ஆகிவிட்டது" என்ருர். - - - "ஆமாம். இனிமேல் நான் உங்கள் ஆள். தொழி லாளருக்கும் கஷ்டம் வந்துவிட்டது. போனதை மறந்து விட்டுப் புதிய மனிதர்கள் ஆவோம்.” - வேலாயுதம் பேசின்ை முதலாளியும் பேசினர். இரு வருக்கும் மனம் மாறியிருந்த சமயம் ஆதலால் ஒருவர்க் கொருவர் யோசனையில் ஒத்துப்போனர்கள். - மறுநாளே வேலே சிறுத்தம் முடிவடைந்தது. தொழி லாளர்கள் குறை தீர்ந்தது. வேலாயுதம் அன்று மாலையில் பிரசங்கம் செய்தான். பெரிய கூட்டம், டாக்டர் தலைமை வகித்தார்; தலையில் கட்டுடன் அவர் காற்காலியில் அமர்க் திருந்தார். ,