பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - வ8ளச் செட்டி "தோழர்களே, நான் அதிகமாகப் பேசப்போவ தில்லை. நாம் அனேவரும் ஒரு குடும்பம் என்பதை நாமும் மறந்தோம்; முதலாளியும் மறந்தார். தமக்கு ஆவேசம் இருந்தது; அறிவு வெளிப்படவில்லை. ஒரு நாள் பேச் சோடு தீரவேண்டிய சமாசாரம் பல நாள் பட்டினி இருந்தும் திரவில்லை. இந்த மகாதுபாவர் உங்கள் ஆத்திரத் தைத் தம் மேனியில் தாங்கிக்கொண்டார். அதனுல்தான் நமக்கு விடிவு வந்தது. ஆவேசத்துக்காகவே ஆவேசம், வேலே நிறுத்தத்துக்காக வேலே கிறுத்தம் என்ற கொள் கையை இன்றுடன் நான் விட்டுவிட்டேன். போதும் அதன் விளைவு. ஆண்டவன் கமக்குச் சாந்த நெறியையும் சமயத்தில் இழவாத அறிவையும் அருள் செய்வாராக!” என்று முடித்தான். - - ★ - - இப்போதெல்லாம் எங்கே வேலே நிறுத்தம் வந்தா லும் குத்தங்குடியில் வேலை நிறுத்தமே வருவதில்லை. முதலாளியும் சரி, தொழிலாளரும் சரி, ஒரே குடும்பத் தைச் சேர்ந்தவர்களாகிவிட்டார்கள்.