பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிகாரம் கதிர்காமம் போகிறவர்களுக்கு மாத்தரா என்ருல் கன்ருகத் தெரியும். இலங்கையில் கொழும்பிலிருந்து நூறு மைல் தூரத்தில் இருக்கும் சிறிய நகரம் அது; கடற் கரை ஓரத்தில் அமைந்துள்ள வியாபார ஸ்தலம். மாத் துறை என்று அதன் பெயரைத் தமிழாற் சொல்லலாம். அங்கேதான் ஆஞ்சனேய செட்டியார் கடை வைத் திருந்தார். சின்னஞ் சிறு பிராயத்திலே செட்டியார் தமிழ் காட்டிலிருந்து இலங்கையில் குடியேறினவராம். ஆஞ்சனேய செட்டியார் என்று அவரை எல்லோரும் அழைத்தாலும் அவருக்கு அப்பா அம்மா வைத்த பெயர் வேறு. அந்தப் பெயரை அவரே மறந்து போயிருப்பார். வெள்ளேயன் செட்டியாரே ஆஞ்சனேய செட்டியாராகி யிருக்கிருர். அந்தச் செட்டியார் என்ற பட்டம் கூட அவர் வியாபாரம் செய்வதனால் வந்த பெயர். ஆஞ்சனேயரிடத்தில் அவருக்கு அபார பக்தி. இலங் கைத் தமிழர்கள் பெரும்பாலும் சிவ பக்தி உடையவர்கள். முருகன் கோயில், பிள்ளையார் கோயில், சிவன் கோயில் என்று கோயில்கள் இருக்குமே யொழிய விஷ்ணு கோயிலைக் காண்பது அருமை. அந்த இலங்கையிலே செட்டியார் ஆஞ்சனேயருக்குப் பிரம்மாண்டமான கோயில் ஒன்று கட்ட எண்ணினர். - அவருடைய வியாபாரம் செழித்து ஓங்கியது. ரூபாய்க்கு ஒரு சதம் ஆஞ்சனேயருக்கு என்று ஒதுக்கி வைத்தார். அது ஆயிரம் ஆயிரமாகச் சேர்ந்துவிட்டது.