பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7o. வளைச் செட்டி லட்சத்துக்கு மேலும் போயிற்று. ஆஞ்சனேய தர்மம்’ என்றே அந்தப் பணத்தை வைத்திருந்தார். 'ஏன், செட்டியாரே, இந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று யாராவது கேட்டால், "இலங்கையிலே இல்லாத அதிசயமான கோயிலைக் கட்டப் போகிறேன்' என்பார். .

அதென்ன, அப்படி விசேஷமான கோயில்?" :ஆஞ்சனேயருக்குப் பெரிய கோயில் எழுப்ப எண்ணியிருக்கிறேன். அவருடைய திருவருள் இருந்தால் அது கிறைவேறும்.'

"ஆஞ்சனேயர் கோயிலா? பிள்ளையார் கோயில் சிவன் கோயில் என்று கட்டுவார்கள். கதிர்காமம் போகும் வழியில் இருக்கும் இந்த ஊரிலே முருகனுக்கு ஒரு கோயில் கட்டிலுைம் பொருத்தமாக இருக்கும். திடீரென்று ஆஞ்சனேயரை நினைத்துக் கொண்டீர்களே! அது என்ன?” செட்டியாருக்கு இந்தக் கேள்வியைக் கேட்டவரிடம் கொஞ்சம் கோபம் உண்டாகும். ஆனால் அதை அவர் வெளியிலே காட்டிக் கொள்ளமாட்டார். அதுதானே வியாபார ரகசியம்? 'நீங்கள் ராமாயணம் வாசித்திருக்கிறீர்களா? இந்த இலங்கை ராவண ராஜ்யமாக இருந்தது. அதர்மம் வளர்ந்த பூமியாக இருந்தது. இங்கே மகாலங்மி வந்து பத்து மாதம் இருந்தாள். அதனல் இங்கே லக்ஷ்மீகரம் உண்டா யிற்று. இன்று இந்தியாவில் பஞ்சம் பஞ்சம் என்று ஜனங் கள் திண்டாடும் பொழுது இலங்கை சுபிட்சமாக இருக் கிறதே, எதல்ை என்று நினைக்கிறீர்கள்? மகாலகடிமி இங்கே தங்கியிருந்த விசேஷங்தான்.” 'அதற்கும் ஆஞ்சனேயர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?" -