பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிகாரம் 71 'அதற்குள் அவசரப்படுகிறீர்களே! ராவண ராஜ்ய மாக இருந்த இலங்கையில் பூரீ ராமசந்திரமூர்த்தியின் திரு வடி பட்டது. பிறகு விபீஷண ராஜ்யமாயிற்று. சீதா பிராட்டி இருப்பதைக் கண்டுபிடித்து ராமபிரானுக்குத் தெரிவித்து ராவண சம்ஹாரத்துக்கு மூலகாரணமாக இருந்த மூர்த்தி யார் தெரியுமா? சாrாத் ஆஞ்சனேய மூர்த்திதான். ராமாயணத்திலே மிகவும் உத்தமமான காண்டம் சுந்தர காண்டந்தான். ராமாயண பாராயணம் செய்தால் முதலில் சுந்தர காண்டத்திலிருந்து ஆரம்பிப் பார்கள். தங்களுக்கு உள்ள குறைகள் போக வேண்டுமா ல்ை சுந்தர காண்டம் பாராயணம் செய்வார்கள். அந்தச் சுந்தர காண்டம் முழுவதும் ஆஞ்சனேயருடைய பராக் கிரமத்தைச் சொல்வது. ராமாயணத்திலே முக்கியமான காண்டமாகிய சுந்தர காண்டத்தின் கதாநாயகனே ஆஞ்சனேயரென்று சொல்லிவிடலாம்.' - - கன்ருகப் பிரசங்கம் செய்வீர்கள் •. போலிருக் கிறதே!' - . - 'அது கிடக்கட்டும் ஐயா, விஷயத்தைக் கேளும். இலங்கையைப் புனிதப் படுத்த வந்தவர் ஆஞ்சனேயர். அவரை இலங்கையில் உள்ளவர்கள் வழிபடாமல் இருக் கலாமா? கம்பராமாயணத்தைப் படித்தால் கம்பர் ஆஞ்ச னேயருக்கு எவ்வளவு சிறப்புச் சொல்கிருர் என்று தெரிய வரும். இலங்கையில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதி அவருக்குக் காணிக்கையாகச் சேர வேண்டியது நியாயம் தானே?” கேள்வி கேட்ட அன்பர் மேலே ஒன்றும் கேட்கமாட் டார். செட்டியார் சொல்வது நியாயமாகவே படும். கோயில் கட்ட ஆரம்பித்தார் செட்டியார். இந்தியாவி லிருந்து கொத்து வேலை செய்கிறவர்களையும், சிற்பாசாரி