பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வளைச் செட்டி யர்களையும் வருவித்தார். பெரிய திட்டம் போட்டுக் கோயில் கட்டத் தொடங்கினர். கட்டி முடித்துவிட்டார். பேருக்கு ஒரு சிறிய ராமர் கோயிலேக் கட்டினர். அதற் கெதிரில் கைகுவித்த கோலத்தோடு மாருதி கிற்கிரு.ர். பெரிய திருவுருவம். சுற்றிலும் பிராகாரங்கள், மண்டபங் கள், பக்தர்கள் வந்தால் தங்கும் இடங்கள் எல்லாம் கட்டி ஞர். கோயில் முடிந்து கும்பாபிஷேகம் கடந்தது. அந்த மாதிரி கும்பாபிஷேகத்தை அந்த்ப் பக்கத்திலே உள்ளவர் கள் பார்த்தே இருக்கமாட்டார்கள். கும்பாபிஷேகத்துக் குப் பிறகு மண்டலாபிஷேகம் கடந்தது. பிறகு கித்திய பூஜை. சனிக்கிழமைதோறும் வடைமாலே சாத்துவார். சரி யாக ஆயிரத்தெட்டு வடைகளே மாலையாகக் கோத்து ஆஞ்ச னேயருக்குப் போடுவார். இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கோயிலைத் தரிசித்துச் சென்ருர்கள். செட்டியாருடைய கடை உண்டியலில் சேரும் பணத்தோடு, கோயிலிலேயே ஓர் உண்டியல் போட்டிருந்தார்; அதில் வேறு பணம் சேர்க் தது. ஆஞ்சனேயர் அமோகமாகப் பக்தர்களின் வழி பாட்டைப் பெற்று அறுக்கிரகம் செய்து கொண்டிருந்தார். 女 நெடுந்துாரத்திலிருந்து வருகிறவர்கள் ஆஞ்சனேய தரிசனம் செய்துகொள்வதோடு ஆஞ்சனேய செட்டியாரை யும் பார்த்து அவருடைய பக்தியை உணர்ந்து பாராட்டி விட்டுச் செல்வார்கள். ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு பரதேசி வந்தார். மொட்டைத் தலையும் காவி வேட்டியும் உடையவராக இருந்தார். நல்ல ஒளி படைத்த முகத்தில் புன்முறுவல் அழகு செய்தது. அவர் ஆஞ்சனேயர் கோயிலைத் தரிசிக்க வந்தார். தரிசித்துவிட்டுச் செட்டி யாரையும் பார்க்கப் போனர். துறவியானமையால் செட்டி