பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிகாரம் 73. யார் எழுந்து மரியாதை செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்ருர். . , "ஆஞ்சனேயர் கோயிலைச் சாமி பார்த்ததா?” என்று விநயத்தோடு ஆஞ்சனேய செட்டியார் கேட்டார். - 'மிகவும் கன்ருக இருக்கிறது. நான் இந்தியாவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன். தாராபுரத்து ஹதுமாரைத் தரிசித்திருக்கிறேன். நாமக்கல் மாருதியைத் தரிசித்திருக்கிறேன். ஒருவந்துாரில் உள்ள பஞ்ச முக ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு வாரம் இருந்திருக் கிறேன். இந்தியாவில் ஆஞ்சநேயர் கோயில் இருப்பது ஆச்சரியம் அல்ல. இலங்கையில் ஆஞ்சநேயரை யாவரும் அடியோடு மறந்து போய்விட்டார்கள். இந்த இடத்தில் இவ்வளவு அற்புதமான கோயில் கட்டியிருக்கிறீர்கள். கோயிலைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இதன் அருமை தெரி யாது. ஆஞ்சநேய பக்தர்களுக்கு என்ருகத் தெரியும். அற்புதமாக இருக்கிறது." சாமியார் இதைச் சொல்லும்போது அவர் கண்களில் ஒளி சுடர்ந்தது. உண்மையில் அவர் உள்ளத்தில் இந்தத் திருக் கோயிலக் கண்டு பேரானந்தம் ஏற்பட்டிருக்கிற தென்று தெரிய வந்தது. 'சாமியைப் போன்ற மகான்களெல்லாம் கண்டு மகிழ்ந்தால் அடியேன் செய்த பாக்கியம் அது. ஆஞ்ச னேய மூர்த்தி திருவருள் அதை நடத்தி வைத்தது." 'இலங்கைக்கு வந்து பணம் சம்பாதித்த இந்தியர் கள் எவ்வளவு பேர் இருக்கிருர்கள்? உங்களைக் காட்டிலும் அதிகமான பொருள் ஈட்டிப் பெரிய பெரிய தேயிலைத் தோட்டங்களே யெல்லாம் வாங்கினவர்கள் பலர் இருக் கிருர்கள். அவர்கள் பாக்டரி கட்டுகிருர்கள். பள்ளிக்