பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வளைச் செட்டி கூடம், ஆஸ்பத்திரி, தபால் ஆபீஸ் எல்லாம் அங்கே எழும்புகின்றன. ஆனல் ஒரு சின்னப் பிள்ளையார் கோயில் கூடக் கட்டுகிறதில்லை. அப்படி இருக்க, இங்கே நீங்கள் இவ்வளவு பெரிய கோயிலே-அதுவும் ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டக் காரணம் என்ன? ஆஞ்சநேயர் கோயில் கட்டவேண்டு மென்று உங்களுக்கு யாராவது சொன்னர் களா? அல்லது உங்களுக்கே தோன்றியதா?” என்று சாமி யார் கேட்டார். - செட்டியார் சிறிது நேரம் பதில் சொல்லவில்லை. அவர் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். சாமியார் அவரைப் பார்த்தார். "எனக்குச் சொல்லக் கூடாதென்ருல் குற்றம் இல்லை. நானும் ஆஞ்சநேய மூர்த் தியையே நம்பி வாழ்கிறவளுகையால் கேட்டேன். உங்கள் பக்திதான் காரணம் என்று தெரிந்துகொண்டேனே, அதுவே போதும்!” என்று கூறினர். செட்டியார் சாமியாரை கிமிர்ந்து பார்த்தார். அவர் கண்களில் நீர் தேங்கி கின்றது. 'சாமி, உண்மையைச் சொல்கிறேன். உங்களைப் பார்த்தால் பரம ஞானியாகத் தோன்றுகிறது. உங்களிடம் பொய் சொல்லக் கூடாது. இதே கேள்வியை இங்குள்ளவர்கள் கேட்டார்கள். ஆனல் அவர்களுக் கெல்லாம் வேறு காரணம் சொன்னேன். உங்க ளிடம் அதைச் சொல்லக் கூடாது. என் நெஞ்சில் உள்ளதை யாராவது ஒரு மகானிடம் சொல்ல வேண்டும் என்றே நானும் காத்திருந்தேன்' என்று மெல்ல மெல்லப் பீடிகை போட்டார் செட்டியார். "சொல்வதில் மனசுக்கு ஏதாவது சங்கடம் இருப்ப தானுல் சொல்ல வேண்டாம். நானும் உங்களைப்போலவே மாருதியின் பராக்கிரமத்தில் ஈடுபட்டவன். நீங்கள் சொல் வதை நான் அறிந்து மகிழ்வேன்' என்ருர் சாமியார்.