பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிகாரம் 75 ‘சாமி, ஆஞ்சநேயப் பெருமான் திருவருளே என்ன வென்று சொல்வது! ஒன்றுக்கும் உதவாத பிச்சைக் காானக இருந்த இந்த ஏழையை இன்று இந்த கிலேயில் வைத்திருப்பது அந்த மூர்த்தியின் கிருபைதான். பல வருஷங்களுக்கு முன் நான் இருந்த கிலே என்ன? அப்போது நான் மகா பாதகம் ஒன்றைச் செய்தேன். இப்போது இத்தனே செய்திருந்தும் அந்தப் பாதகம் என் மனசை உள்ளுறத் துளைக்கிறது." செட்டியார் சிறிது. மெளனமாளுர். - - மறுபடியும் தொடங்கினர்: "என் அவலக் கதையை முதலிலிருந்து சொன்னுல்தான் என் துக்கம் ஆறும் ; விஷயமும் விளங்கும். நான் இலங்கைக்கு வந்து நாற்பது வருஷங்கள் ஆகிவிட்டன. என் இளம் பிள்ளேப் பருவத். திலே நான் தாய் தந்தையை இழந்தேன். எங்கள் ஊர் அரவக்குறிச்சி. செங்குந்தர் குலத்திலே பிறந்தேன். ஆனல் குலம், பரம்பரை, ஊர் என்று எதையும் சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் எட்டாவது வயசில் நான் அகாதையாகி விட்டேன். பிச்சை வாங்கும் தொழில் ஒன்றுதான் என்னல் கற்றுக்கொள்ள முடிந்தது! அதைத் தடை செய்வாரும் இல்லை. வெறும் பிச்சைக் காரணுக இருந்தவன் ஒரு குரங்காட்டியின் சிாேகம் பிடித் தேன். அவனுடைய சிசேகம் அதிகமாக ஆக நானும் ஒரு குரங்கைப் பிடித்துக் கொண்டேன். அதைப் பழக்கி னேன். இலங்கையைத் தாண்டுவதும், அசோக மரத்தில் ஏறுவதும், சீதையைக் கும்பிடுவதும், ராமரிடம் கை கட்டி வாய்பொத்தி நிற்பதுமாகப் பல வேடிக்கைகள் அதற்குக் கற்றுக் கொடுத்தேன். ஊர் ஊரர்கப் போய்க் குரங்கை ஆட்டி ஜீவித்து வந்தேன்.” - நடுவில் சாமியார் ஒரு கேள்வி கேட்டார்: "உங்கள் ஊர் அரவக்குறிச்சி யென்ரு சொன்னீர்கள்? கரூருக்குப் பக்கத்தில் இருக்கிறதே, அதுவா?” என்ருர்.