பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வ&ர்ச் செட்டி "ஆம், அந்த அரவக்குறிச்சியில் பிறந்தேனே ஒழியக் குரங்காட்டியாக அந்த ஊரில் இருக்க முடியுமா? எங் கெங்கோ சுற்றினேன். ஒரு நாள் குளித்தலைக்கு வந்தேன். அங்கே ஒரு முதலியார் வீட்டுக்குப் பிச்சை வாங்கப் போனேன். அந்த வீட்டு வாசலில் குரங்கைக்கொண்டு வேடிக்கை காட்டினேன். குழந்தை குட்டிகள் சுற்றிலும் கூடிக் கொண்டார்கள். அப்போது அந்த வீட்டுப் பையன் தன்கையில் இருக்கிற மோதிரத்தைக் கழற்றிக் குரங்குக்கு முன் நீட்டினன். அவன் சிறு பிள்ளை; செல்லப் பிள்ளை. மோதிரம் போட்டிருந்தான். பின்னல் நடக்கப் போவது அவனுக்குத் தெரியுமா? அந்த மோதிரத்தைக் கையில் வைத்துக்கொண்டு குரங்கை, ஸா, ஸா என்று கூவிப் போக்குக் காட்டினன். 'குரங்கு அசப்பில் ல ப க் .ெ க ன் று, அந்த மோதிரத்தை அவன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு வாயில் வைத்துக் கடித்தது. குரங்கு பிடுங்கினவுடன் பையன் கோவென்று கத்தினன். "ஐயோ ! என் மோதிரம்' என்று அலறிஞன். நான் குரங்கினிடமிருந்து அதைப் பிடுங்கப் போனேன். குரங்கு அதை விடாமல் கடித்தது. நான் மிரட்டினேன். கையை நீட்டினேன். கோலே ஓங்கினேன். குரங்கு மோதிரத்தைத் தரவில்லை. கயிற்றைச் சுண்டி இழுத்தேன். அப்படியும் தரவில்லை. பையனே கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தான். கூட்டம் வேறு கூடிவிட்டது. எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. பாவி! கையில் இருந்த கழியினல் ஓங்கி ஓர் அடி அடித்தேன். சாமி, அந்தக் கணத்தில் அந்தக் குரங்கு துடித்த து டி ப் ைப கினைத்தால் இப்பொழுதும் என் குலே கடுங்குகிறது. பெற்ற குழந்தை யைக் கழுத்தைத் திருகிப் போடும் பெண் உண்டா? நான் அந்த மாதிரியான பாதகத்தைத்தான் செய்தேன் சாமி!