பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிகாரம் 77. குரங்கு வீரென்று கத்தியது. சுருண்டு கீழே உருண்டது. அவ்வளவுதான். அதன் பிராணன் போய்விட்டது. மோதிரத்தை அந்தப் பையன் வாங்கிக்கொண்டான். குரங்கின் உயிரைக் காலன் வாங்கிக்கொண்டான். 'கூடியிருந்த கூட்டம் என்னேயும் முதலியார் வீட்டுப் பையனையும் கண்டபடி யெல்லாம் திட்டத் தொடங்கியது. இந்தப் பிள்ளைக்குக் குரங்குப் புத்தி வருவானேன்? கையிலே போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றிக் காட்டு வானேன்? குரங்கு உத்தமமான மிருகம் ஆயிற்றே : ராம துரதன் அல்லவா? அதைக் கொன்ற பாவம் லேசில் திருமா? என்ருர் சிலர். ' 'பாவம் பையனுக்கு என்ன தெரியும்? குரங். காட்டிக்கு அதனிடமிருந்த அந்த மோதிரத்தை வாங்கத் தெரியவில்லையே! இன்னும் பழக்கப்படாத குரங்கோ, என்னவோ!' என்று சிலர் செத்துப் போன குரங்கையே குறை கூறினர்கள். 3. ' ஏழை பாவம்! ஏதோ இதை வைத்துக் கொண்டு. வேடிக்கை காட்டிப் பிழைத்து வந்தான். குழந்தைப் பிள்ளையைப் போலத்தானே வளர்த்திருப்பான்? இந்தப் பையன் பண்ணின அட்டகாசத்தில் அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. அடித்தான். படாத இடத்தில் பட்டுவிட் டது. அவன்தான் என்ன செய்வான்? இப்போது நஷ்டம் அவனுக்குத்தானே ஒழிய இந்தப் பையனுக்கு என்ன? மோதிரந்தான் கிடைத்துவிட்டதே' என்ருர் சிலர். - - - "இந்தக் கூட்டத்துக்கிடையே நான் பிரம்மஹத்தி பிடித்தவனேப் போல் உட்கார்ந்திருந்தேன். குரங்கை 'எடுத்து மடியில் போட்டுக்கொண்டேன். -