பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வளைச் செட்டி 'அந்தச் சமயத்தில் அந்த வீட்டுக்கார முதலியார், எங்கோ வெளியில் போயிருந்தவர், வந்தார். விஷயத்தை அவர் கேட்டார். யாரைக் கோபித்துக்கொள்வதென்று அவருக்குத் தெரியவில்லை. கூட்டம் கூடிக்கொண்டு ஜனங் கள் நிற்பதைப் பார்த்தார். எல்லோரும் போங்கள்; இங்கே என்ன வேடிக்கை' என்று இரைச்சல் போட்டார். தம் பிள்ளையை வைதார். என்னேயும் மிரட்டினர். பிறகு உள்ளே போய்ப் பத்து ரூபாயைக் கொண்டுவந்து என்னி .டம் கொடுத்து, இந்தா, இந்தக் குரங்கைக் கொண்டு போய் எங்கேயாவது நல்ல இடத்தில் புதைத்துவிடு. அதன் மேல் பூவும் அரிசியும் வாங்கிப் போடு. குரங்கைக் கொல் வது மகா பாவம்' என்று சொல்லி அந்த புண்ணியவான் என்னை அனுப்பினர். * 'நான் தோளில் செத்த குரங்கைப் போட்டுக் கொண்டு போனேன். கூட்டம் என்னைத் தொடர்ந்து வந்தது. அவர்கள் என்னே ஓர் இடத்தில் கிறுத்திவிட் டார்கள். வீதியில் ஒரு துணியைப்போட்டு, ஆஞ்சனேய தர்மம்' என்று சொல்விக் காசு வாங்கினர்கள். ஜனங்கள் காலன. அரையன, ஓரணுப் போட்டார்கள். சிலர் ரூபாய் கூடப் போட்டார்கள். இருபது ரூபாய் வரையில் சேர்க் தது. கடைசியில் அன்று மாலை கொட்டு மேளத்துடன் என்னுடைய குரங்கை அந்த ஊரில் அடக்கம் செய்தேன். என் குரங்கு சாமியாகிவிட்டது. - 'அன்றுதான் நான் சத்தியம் செய்தேன், இனி மேல் உழைத்துச் சம்பாதிப்பது; இல்லாவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்று. கையில் இருக்த பத்து ரூபாயைச் செலவழிக்கவில்லை. குர்ங்கைக் கொன்ற பாவத்துக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற தீவிர எண்ணம் உண். டாகிவிட்டது. எந்த மாதிரி பரிகாரம் என்பதை நான்