பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைச் செட்டி 8 போட்டுக்கொள்' என்று அவள் வற்புறுத்தினுள். நவ ராத்திரி காலமாகையால் பெண்களெல்லாம் அழகாக உடுத்துக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு வீடுவீடா கப் புகுந்து கொலுவைப் பார்த்து வருவது, அவள் கண் னில் படாமலா போகும்? தன் மகள் ரங்கம் தளதள வென்று வளர்ந்து பூத்துக் குலுங்கும் பூஞ்செடிபோல கிற்கவேண்டியவள், உடம்பு ஒட்டிக் கன்னம் ஒட்டி நிற்பதையும் பார்த்தாள். அவள் கிலேயை கினேந்து குமைக்தாள். உடம்பிலே ஊட்டத்தை ஏற்றப் பகவான் தான் கண் பார்க்கவேண்டும். நாலு வளைகளாவது அடுக்க லாமென்று கினைத்தாள். அம்மா சொல்லிக் கொண்டிருந்ததற்குத் துணையாக அன்று காலையில் வளைச் செட்டி வீதியிலே வந்தான். அவர்கள் வீட்டுத் திண்ணேயிலே வந்து இறங்கினன். அம்மாவின் தொந்தரவு பொறுக்காமல் அவள் இரண்டு வளைகளை அடுக்கிக்கொள்ளச் சம்மதித்தாள். ஆனல் அவள் கை சம்மதிக்கவில்லையே! வளைச் செட்டி பொறுமையோடுதான் வளை போட் டான். முதல் வளே உடைந்துபோய் விட்டது. என் னம்மா. இப்படி உடம்பைத் திருப்புகிருயே! சும்மா உட்கார். வளே உடைந்தால் எனக்குத்தானே நஷ்டம்?" அவள் பல்லேக் கடித்துக்கொண்டுதான் உட்கார்க் திருந்தாள். அவள்தான் என்ன செய்வாள்? கையில் மணிக்கட்டு எலும்பெல்லாம் தெரிந்தன. வாழைத்தண்டு போல் உருண்டு திரண்டிருந்தால் எத்தனே வளே வேண்டு மாலுைம் பொடலாம். அவள் கை வளேக்கு வாகாக இல்லை. 'முரட்டுக் கை அம்மா, இது” என்று வளைச் செட்டி அலுப்புடன் சொன்னன். ஒன்று, இரண்டு, மூன்று வளே களே அவன் உடைத்துவிட்டான். நாலாவது வளையைப்