பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வ&ளச் செட்டி டர்ர். அவர் சொன்ன வார்த்தைகளில் ஈடுபட்டு நானும் இலங்கைக்கு வந்தேன். இங்கே ஒரு தேயிலைத் தோட் டத்தில் வேலை செய்தேன். ஹனுமார் கடைக்கண் பார்த் தார். நான் மெல்ல மெல்ல மேஸ்திரி ஆனேன். தேயிலைத் தோட்டங்களில் அந்தக் காலத்தில் நடந்த அக்கிரமம் சொல்லி முடியாது. அங்கே தொடர்ந்து வேலை செய்ய எனக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் கையில் பணம் சேர்த்துக்கொண்டு இந்தப் பக்கம் வந்தேன். சின்ன வியாபாரமாக ஆரம்பித்தேன். ஆஞ்சனேயர் அருளால் அது வர வரப் பெருகியது. ஜவுளிக்கடை வைத்தேன். அது முதல் நான் கெளரவ மனிதர் கூட்டத்தில் சேர்ந்து விட்டேன். "ஆஞ்சனேய தர்மமாகக் கையில் வைத்திருந்த பத்து ரூபாயைக் குரங்குப் பிடியாகச் செலவழிக்காமல் பிடித்து வைத்திருந்தேன். வியாபாரத்தில் லாபக் கணக்குப் பார்த்து, ரூபாய்க்கு ஒரு சதம் தனியே எடுத்து ஆஞ்சனே யருக்கு என்று போட்டேன். > "என் பாவத்துக்குப் பரிகாரமாக என்ன செய்யலா மென்று யோசித்து யோசித்துப் பார்த்தேன். கடைசி யில் கோயில் கட்டுவதென்று தீர்மானித்தேன். • "மாருதியின் திருவருளால் அதற்கு வேண்டிய பண மும் சேர்ந்தது. ஆஞ்சனேயரே இந்தக் கோயிலைக் கட்டு வித்துக் கொண்டார். சாமி, இந்தப் பாவிக்கு இன்னும் மனசு ஆறுதல் பெறவில்லை. என் குரங்கு தெய்வமாகி விட்டது என்று தோன்றிலுைம் அதைக் கொன்று விட் டேனே என்ற பச்சாத்தாபம் இன்னும் நீங்கின பாடில்லை." செட்டியார் கதையைச் சொல்லி முடித்ததும் சாமி , யாரைக் கவனித்தார். என்ன இது? சாமியார் தாரை