பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிகாரம் 81 தாரையாகக் கண்ணிர் விட்டுக்கொண்டிருந்தார். கதை அவர் மனசை உருக்கிவிட்டது போலும் ... -- 'சாமி! இந்தக் கதையைக் கேட்ட உங்களுக்கே மனசு இவ்வளவு வேதனேப்படுமானல், பாவத்தைச் செய்த எனக்கு எவ்வளவு வேதனை இருக்கும்? யோசித்துப் பாருங் கள். இந்தப் பாவம் முழுவதும் தீர வழியுண்டா சாக்ஷாத் ஆஞ்சனேய மூர்த்தியைப் போலவே நீங்கள் எழுந்தருளி யிருக்கிறீர்கள். சொல்லுங்கள். பாவம் தீருமா?’ என்று காக்குத் தழுதழுக்கச் செட்டியார் கேட்டார். இப்போது சாமியார் கண்ணிர் விடுவதோடு கிற்க வில்லை; விம்மலானர்; விக்கி விக்கி அழுதார். செட்டியாருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. "ஏன் சாமி” என்ருர். ‘'நீ பாவி அல்ல அப்பா! நீ மகா புண்ணியசாலி; பெரிய பக்தன். ஆஞ்சனேயரின் திருவருளேப் பூரணமாகப் பெற்றவன். நான்தான் மகாபாவி மகா பாதகன்' என்று விம்மலுக்கிடையேவார்த்தைகளை வெளியிட்டார் சாமியார். "என்ன சாமி, அப்படிச் சொல்லுகிறீர்கள்?" 'ஆம் அப்பா? நான்தான் அந்தக் குரங்கைக் கொன்ற பாவி! மோதிரத்தைக் கொடுத்துக் கொன்ற பாவி!' "என்ன! யோ?"-செட்டியார் கேள்வியிலே ஆச்சரி யம் பொங்கியது. - "ஆம். அந்தப் பாவி கந்தசாமி நான்தான். உன் வாழ்க்கை ஏறுமுகமாக விற்கிறது. என் வாழ்வு இறங்கு முகமாக இருக்கிறது. நான் இன்று பரதேசி என் பாவத் துக்குப் பரிகாரம் காணுத பாவி' 赏 மாத்துறை ஆஞ்சனேயர் கோயிலில் இன்று பூஜை செய்கிறவர் கந்தசாமி சுவாமிகள். அவர் பக்தி பெரிதா, ஆஞ்சனேய செட்டியார் பக்தி பெரிதா என்று எடை போட்டுப் பார்க்க யாராலும் முடியாது. 6