பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ புது மலர்ச்சி. "என்ன, அத்தனை சுவாரசியமாக வாசித்துக்கொண் டிருக்கிறீர்களே! யார் எழுதின கடிதம்' என்று கேட்டுக் கொண்டே உள்ளே புகுந்தேன். 'வாருங்கள், வாருங்கள். என்னுடைய காத்தனர் எழுதியிருக்கிருர்" என்று பவானி சொன்னுள். அவளுக்கு அதில் சுவாரசியம் உண்டாவதற்குக் கேட் பானேன்? அவளுடைய இன்றைய வாழ்க்கையிலே அவள் நாத்தனர் எழுதிவரும் கடிதங்களே உயிர் மருந்தாக உதவின. அவளுடைய அந்தரங்கமெல்லாம் தெரிந்த எனக்கு அந்தக் கடிதங்களிலே அவள் ஆழ்ந்து போவதற் குரிய காரணம் கன்ருகத் தெரியும். பவானி எங்கள் ஊர்ப் பெண் பள்ளிக்கூடத்தில் ஒர் ஆசிரியை. குழந்தைகளெல்லாம் சின்ன வாத்தியாசம்மா' என்று அழைப்பார்கள். குழந்தைகளிடம் அவள் அன் பாகப் பழகுவாள். ஒட்டிக்கொண்டு பேசுவாள். யாரோ துரத்து உறவினளான கிழவி ஒருத்தியோடு தனி வீட்டில் குடியிருந்துவந்தாள். வந்த புதிதில் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. என் பெண் சுந்தரிக்கு அவள் ஆசிரியை. சுந்தரி அவளைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து சொல்வாள். 'ஒரு நாள் அவளே இங்கேதான் கூட்டிவாயேன்” என்று சொன்னேன். அவள் மறுகாளே பவானியைக் கூட்டி வந்துவிட்டாள். அது முதல் எங்கள் இருவருக்கும் நட்பு உண்டாயிற்று. அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள். நானும் எப்போ தாவது அவள் வீட்டுக்குப் போவேன்.