பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது மலர்ச்சி 88 ஒரு நாள் அவளிடம் துணிச்சலாக ஒரு கேள்வி கேட் டேன். 'உங்கள் கழுத்தில் திருமங்கல்யம் இருக்கிறதே! உங்கள் கணவர் எங்கே இருக்கிருர்? நீங்கள் ஏன் இப் படித் தனியே இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அவள் எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னுள். ★ நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள் பவானி. எட்டாம் வகுப்பு வரையில் வாசித்திருந்தாள் .கல்யாண வயசு வந்த வுடன் அவள் தகப்பனர் நிறையப் பணம் செலவு செய்து பி. ஏ. படித்த ஒரு பையனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார். கல்யாணம் ஆன அதிருஷ்டம் பிள்ளையாண்டா னுக்குக் காலேஜில் பேராசிரியர் வேலே ஆயிற்று. பேராசி ரியர் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பவர்; தத்துவ நூலாராய்ச்சியிலே ஈடுபடுபவர். இப்போது பங்களுரில் ஒரு கல்லூரியின் தத்துவப் பேராசிரியராக விளங்குகிரு.ர். பவானி புக்ககம் போய் ஒரு வருஷத்தான் வாழ்ந்தாள். வீடு முழுவதும் புத்தக மயம். அவற்றை ஒழுங்காக எடுத்து வைப்பதற்கே இரண்டாளுக்கு வேலை சரியாக இருக்கும். பேராசிரியருக்குத் தங்கை ஒருத்தி இருக்கிருள்; கல்யாணி என்று பெயர். அவள் கல்யாணமானவுடனே கணவனே இழந்தவள். தன் தமையனருடன் இருந்து வரலாளுள். அவளுக்குக் கொஞ்சம் இங்கிலீஷ் எழுதப் படிக்க வரும்; அவள் தன் அண்ணுவுக்குச் சில சிறிய உதவிகளைச் செய்வாள். அவர் எழுதியவற்றை ஒழுங்கு படுத்தி வைப்பது, குறிப்புகளைச் சிதருமல் சேர்த்து வைப் பது, புத்தகங்களை உரிய இடத்தில் அடக்கி வைப்பது முதலிய வேலைகளைச் செய்வாள். பவானி வீட்டுக்கு வந்ததும் சமையல் வேலை முதலிய வற்றை அவளிடம் விட்டுவிட்டாள். பவானிக்கும் புத்தக