பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வளைச் செட்டி விஷயங்களில் அவ்வளவு காட்டம் இல்லை. மணமான புதிதில் கணவனும் மனேவியும் ஒருவிதமாக வாழ்க்கையை கடத்தினர்கள். பவானியின் கணவர் அவளிடம் சில வேலை களே ஏவுவார். புத்தகங்களின் பெயரைத் தெரிந்துகொள் ளும் அளவுக்காவது இங்கிலீஷ் படித்துக்கொள்ளச் சொல்வார். 'அதுதான் உங்கள் தங்கை கவனித்துக்கொள் கிருளே' என்று துடுக்காக இவள் பதில் சொல்லிவிட் டாள். அன்றுதான் பேராசிரியர் உள்ளத்தில் இவளைப் பற்றி ஓர் அருவருப்பு முளேயிடத் தொடங்கியது. கல்யாணி பவானியிடத்தில் மிகவும் பிரியமாக இருக் தாள். "என்னைப் படிக்காத முட்டாள் என்று அவர் அடிக் கடி சொல்கிருர்” என்று பவானி தன் காத்தனரிடம் சொல்லி வருந்துவாள். - - "ஆமாம். அவருக்கு என்ன வேலை? எல்லாரும் படித்துப் பேராசிரியராகிவிட்டால் பிறகு குடும்பம் நடத்த யார் வருவார்கள்?' என்று கல்யாணி சமாதானம் சொல்வாள். அவர்கள் இரண்டு பேரும் வரவர நெருங்கிப் பழகி ஞர்கள். அவ்வளவுக்கவ்வளவு பவானிக்கும் அவள் கணவ. ருக்கும் இருக்த நெருக்கம் தளரத் தொடங்கியது. எதற் கெடுத்தாலும் சிள் சிள்ளென்று விழத் தொடங்கினர். ஒரு நாள் பிற்பகல் மூன்று மணிக்குப் பவானி அசதி யாகப் படுத்துக்கொண்டிருந்தாள். முதல் நாள் இரவு நெடு நேரம் விழித்துக்கொண்டு வேலைகளைச் செய்தமையால் அவளே அறியாமல் தூக்கம் கண்ணே இழுத்தது. தலைக்கு உயரமாக ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கே அலமாரியில் இருந்த ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து அதன்மேல் ஒரு துணியை விரித்துத் தலைக்கு அணேயாக வைத்துக்கொண்டு படுத்தாள். அப்படியே தாங்கிவிட்டாள். o