பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புது - 85. என்றும் இல்லாத புதுமையாக அன்று பவானியின் கணவர் மூன்றரை மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார். வந்தவுடன் தங்கை அளித்த காபியை உண்டுவிட்டுத் தம் புத்தகக் குவியலிடையே மறைந்தார். ஏதோ புத்தகம் வேண்டியிருந்தது. தேடினர்; கிடைக்கவில்லை. தங்கை யைக் கூப்பிட்டுக் கேட்டார்; இருவரும் தேடினர்கள்; கிடைக்கவில்லை. பவானி தலைக்கணயாக வைத்திருந்த புத்தகத்தைத்தான் அவர் தேடினர். கடைசியில் அது அங்கே இருப்பது தெரிந்தது. அத்தனை நேரம் தேடின பிறகு, அவள் தலையணையாக்கிக் கொண்டது தெரிந்தால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனல் அவர் வெளிப் படையாகக் கோபிக்கவில்லை. பேசாமல் பவானியின் தகப்பருைக்கு ஒரு கடிதம் எழுதினர். வந்து அழைத்துக் கொண்டு போகும்படி. அவர் வந்து அழைத்துப் போனர். இரண்டு மாதங்களில் அனுப்பிவிடலாம் என்றுதான் அழைத்துச் சென்ருர். ஆனல் பவானியின் துரதிருஷ்டம் வேறு விதமாக இருந்தது. அவள் கணவர் அவளே அழைத்துக்கொள்ளவே இல்லை. ஒரு வருஷம் இப்படி இருந்தாள். அவள் கணவருக்கு என்ன என்னவோ எழுதிப் பார்த்தாள். அவள் தகப்ப ருைம் எழுதினர். ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அவள் தன் காத்தருைக்கு எழுதினுள். இரண்டு மூன்று கடிதங் கள் எழுதின பிறகு அவளிடமிருந்து ஒரு சிறிய கடிதம் கிடைத்தது. "அண்ணுவின் கோபம் தணியவில்லை. எப்படி யாவது உன்னே இங்கே கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. அதற்கு வேண்டிய முயற்சிகளையெல்லாம் செய்வேனென்று கிச்சயமாக நம்பு. முயற்சி பலித்தால் உன் அதிருஷ்டம். அண்ணுவுக்குத் தெரியாமல் உனக்குக் கடிதம் எழுதப் பயமாக இருக் கிறது. ஆகையால் என்னிடமிருந்து கடிதத்தை எதிர்