பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - வளைச் செட்டி பாராதே. நல்ல செய்தி இருந்தால் தெரிவிக்கிறேன்" என்று அவள் எழுதியிருந்தாள். அதைக் கண்டபோது பவானிக்குக் கொஞ்சம் நம்பிக்கை உதயமாயிற்று. ஒவ்வொரு நாளும் ஏதாவது நல்ல செய்தி வராதா என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தாள். ஒன்றும் கிடைக்கவில்லை. நாத்தனரே சத்துருவாக இருப்பாள். அவளே நம்புகிருளாம்!' என்று தெரிந்த பெண்மணிகள் பரிகாசம் செய்தார்கள். மாதங்கள் போய்க் கொண்டிருந்தன. பவானியின் தகப்பனர் உலக அநுபவம் உள்ளவர். அவளே விணே வீட்டிலே இருக்கும்படி செய்ய மனமின்றிப் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். ஆருவது பாரம் வரையில் படித் துப் பரீட்சையில் கன்ருகத் தேர்ச்சி பெற்ருள். பிறகு ஆசிரியப் பயிற்சிப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். அங்கும் படித்துத் தேர்ச்சி பெற்ருள். பிறர் கையை எதிர்பாராமல் பிழைப்பதற்குத் தம் மகளுக்கு ஒரு வழியைப் பண்ணி வைத்துவிட்டு அவர் கண்ணே மூடிக்கொண்டார். பவானி, வாத்தியாரம்மாள் ஆளுள். பங்களுரில் தன் கணவர் இன்னும் அந்தக் கல்லூரியில் இருப்பதைத் தெரிந்து கொண்டாள். தன் காத்தனருக்குத் தன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்களே யெல்லாம் எழுதியனுப் பினுள். அவளிடமிருந்து விடையே வரவில்லை. திடீரென்று ஒரு நாள், இந்த ஊருக்குப் பவானி வந்த மறு வருஷம், ஒரு கடிதம் வந்தது. கல்யாணிதான் எழுதி யிருந்தாள். பல மாதங்களுக்கு முன் நீ எழுதிய கடிதம் கிடைத்தது. நான் இன்னும் என் முயற்சிகளேத் தளர்த்த வில்லை. என்றைக்காவது ஒரு நாள் கடவுள் என் ஆசையை நிறைவேற்றமாட்டாரா என்று எங்கி வருகிறேன். உனக்