பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

கூடார உதவியாளர்கள் கொண்டாட்டம்

கடுமையாக உழைத்த நேரம் போக, தங்களுக்குக் கிடைக்கும் ஒய்வு நேரத்தை உல்லாசமாக, சந்தோஷமாகப் போக்க உதவியாளர்கள் விரும்பினர்கள். "எல்லோரையும் ஏக நேரத்தில் சந்தோஷமாக்க வல்லதும், சாமர்த்தியத்தை அளிக்க வல்லதுமானவை விளையாட்டுக்கள்தான்’ என்றும் அவர்கள தெரிந்து வைத்திருந்தனர். இராணுவத்தினர் கூடாரமிட்டுத் தங்கியிருக்கும் பகுதியோ காட்டுப் பகுதி யாகும். அங்கே, விளையாடுவதற்குத் தேவையான விளே யாட்டுப் பொருட்களே அவர்களால் எப்படி பெற முடியும்? ஆகவே, கிடைத்ததை வைத்துக் கொண்டு, விளையாட விரும்பினர்கள்.

குதிரை லாடங்கள் முக்கால் வட்டமாகத் தோற்ற மளிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த முக்கால் வட்டமான லாடத்தைப் பார்த்ததும், அந்த உதவியாளர் களுக்கு, ஒலிம்பிக் பந்தயத்தில் பயன்படுத்தப்பட்ட (Disc) தட்டுதான் உடனே நினைவுக்கு வந்தது போலும். தங்களை யெல்லாம் தட்டெறியும் வீரர்களாக கினைத்ததோடு அல்லாமல், அப்படியே பாவித்தும் பரவசமடைந்தார்கள். ஒயிலாக கின்று பார்த்துக் கொண்டு பெருமை கொண் டார்கள்.

தேய்ந்துபோன லாடத்தை ஒரு கையில் வைத்து,சுற்றிச் சுழற்றித் தூக்கியெறிந்தார்கள். துரக்கி வைத்துக் கொண்டு சுற்றும் பாவனையில் மகிழ்ந்து, பிறகு தூரமாகத் துக்கி யெறியவும் தலைப்பட்டார்கள். ஆளுக்கு ஆள் எறியத் தொடங்கியதும், அதிக தூரம் எறிவது யார் என்றபோட்டி மயமான சூழ்கிலேயும் பிறந்தது போலும்.

அதிக தாரம் தாக்கி யெறிந்தவரே வெற்றி பெற்றவர் என்ற விதியுடன் தூக்கி யெறிந்துவிட்டு, தூரமாய் போன, தேய்ந்த லாடத்தைத் தேடித் திரியும் நிலைமையும் அவர்