பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

களுக்கு அடிக்கடி உண்டாகி விட்டது. "இது சிறியதாக இருப்பதால்தானே கண்ணுக்குத் தெரியாமற் போகிறது. பெரிய தட்டாக (Discus) எறிய இன்பமாக இருக்குமே” என்றும் எண்ணினர்கள். நியாயங்தானே!

பெரிய இரும்புத் தட்டு வேண்டுமென்ருல், அதற் கென்று கருமானிடம் போய் செய்துதரச் சொல்லவேண்டும். அதற்கென்று அதிகமாகப் பணங்தர வேண்டும். உதவியாளர் கள் பணத்திற்கு எங்கே போவார்கள்: ஆசையிருந்தாலும் காசில்லா காரணத்தால், தட்டினைப் பெறும் ஆசையைத் தூர எறிந்தனர். காசில்லாமல் கிடைக்கும் முக்கால் வட்ட மான குதிரை லாடத்தையே மீண்டும் நினைத்தனர். "ஏழைக் கேற்ற எள்ளுருண்டை என்பார்களே, அதுபோல இராணுவ உதவியாளர்களின் உற்சாகமும், வட்ட வடிவம் பெருத குதிரை லாடத்தைப் பெற்றுக்கொண்டு சமாதான மடைந்து கொண்டது.

பணம் யாருக்கும் தராமல், பிரச்சினை ஏதும் இல்லாமல் இலவசமாகப் பெற்ற லாடத்தை எறியும் ஆட்டம், கூடார உதவியாளர்களிடையே பிரபலமடைந்தது. தங்களுக்குள் அதிகமாக எறியும் ஆற்றல் நிறைந்தவர் யார் என்று கண்டு பிடிக்கப் போய், அடிக்கடி காணுமற் போகின்ற குதிரை லோடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் கஷ்டப்படும் பொழு தெல்லாம், இந்தக் கஷ்டத்தைப் போக்க வேறு வழி யில்லையா என்று வேதனைப்படவும் செய்தார்கள்.

அதனல், ஆட்டத்தில் ஒரு புதிய முறையைப் புகுத்த முனைந்து வெற்றியும் பெற்ருர்கள். அதாவது, அதிக தூரம் எறிந்துவிட்டு அவதிப்பட்டு தங்கள் ஆனந்தத்தை இழப் பதைவிட, குறிப்பாக ஒரு இடத்தில் கின்றுகொண்டு, ஒரு இடத்தில் குறியுடன் யார் சரியாக எறிகிருர் என்று பார்க்க லாம். அப்பொழுது லாடம் பத்திரமாகவும் இருக்கும். ஆடும்போது பதட்டமில்லாமலும் இருக்கும் என்று விதியை எகிர்ணயித்துக்கொண்டனர்.