பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அந்த இரும்புக் கம்பியானது, களிமண்ணுல் ஆன 3 அடி சுற்றளவுள்ள வட்டத்தின் நடுவில் 1 அங்குல உயரம் வெளியே தெரிவதுபோல ஊன்றப்பட்டிருக்கும்.

ஒரு ஆட்டக்காரர் தனது கம்பி முனையிலிருந்து 4 அடி துாரத்திற்கு அப்பால் போகாமல் கின்றுகொண்டு தன் கையிலுள்ள கோயட்சான அந்த வளையத்தை. களிமண் வட்டத்துக்குள்ளே கிற்கும் ஒரங்குலக் கம்பி முனையில் மாட்டிக்கொள்ளுமாறு எறியவேண்டும். வெற்றிகரமாக கம்பியில் மாட்டிக்கொள்ளுமாறு வளையத்தை எறிந்தவர்க்கு 2 வெற்றி எண்கள் (Points) உண்டு.

அவ்வாறு விழாமல், எதிராளி எறிந்த வளையத்தை விட, கம்பிக்கு அருகே ஒருவர் எறிந்த கட்டு விழுந்தால், 1 வெற்றி எண் உண்டு. எதிராளி எறிந்த தட்டினை, அப்பால் போய் விழுமாறு தன் தட்டினை எறிந்துத் தள்ளி ஆடும் ஆட்டமுறையும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஆல்ை, வளையம் படுக்கை வசமாக விழுந்து கிடக்காமல், விளிம்பான ஒரப்பகுதியில் (Rim) கின்ருல், அது வெற்றி எண் தருகின்ற ஆட்டமாக அமையாது.

ஒன்று மட்டும் காம் உறுதியாக உணரலாம். குதிரை லாடத்தை ஒரு இடம் நோக்கிக் குறிபார்த்து எறிவது போலவே, கோயட்ஸ் ஆட்டத்திலும் குறி பார்த்து எறியும் ஆட்டத் திறமையே அதிகமாக இடம் பெற்றிருந்தது.

பிரிட்டனில் இருந்த பழங் குடிமக்களால் இது அதிக மாக ஆடப்பட்டு வந்தது. டென்னிஸ், பெளலிங் ப்ோன்ற ஆட்டங்களைப்போல, கோயட்ஸ் ஆட்டத்தை நாகரிகமான ஆட்டமாக ஒரு சிலர் கருதவில்லை. டியூடர் (Tudor) காலத்தில் பண்பாளர்கள் ஆட்டம் (Gentlemen game) என்று கோயட்ஸ் ஆட்டம் புகழப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட கிலேமை நீடித்து வந்தது. - -