பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


1. வள்ளலார் சித்த மருத்துவராகவும், சித்தராகவும் இருந்து உடற்பிணிக்கும், மனப்பிணிக்கும் மருந்து கூறிய வர். ஞான மருந்து இம் மருந்து-சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து சுத்த சன்மாரிக்க மருந்து, அருட்சோதி மலையில் துலங்கும் மருந்து, சித்துருவான மருந்து எனைச் சித்தெல்லாம் செயச் செய்வித்த மருந்து' என்ற அவருடைய பாடல் இவற்றை மெய்ப்பிக்கிறது. 2. பெற்ற உடம்பு சாகடிப்பதற்காக அல்ல என்பது சித்தர்கள் கண்ட முடிவு. இதற்குச் சாகாக் கலை என்று பெயரி. - நந்தவனத்தி லோர் ஆண்டி-அவன் காலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி-அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி என்பது ஒரு சாகாக்கலைப் பாடல். நந்தவனத்தில் ஒர் ஆண்டி-உலகத்தில் ஒரு ஆன்மா. நாலாறு மாதமாய்-நாலும் ஆறும், பத்து மாதமாய் தாய் லயிற்றிலிருந்து, குயவனை வேண்டி-பிரம்மாவை வேண்டி. கொண்டு வந்தான் ஒரு தோண்டி-இந்த உடம்பு. இதைப் பாதுகாக்கத் தெரி யாமல் உலக இன்ப துன்பங்களில் உழன்று, கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி - சாகடித்தாண்டி, என்பது, இதன் பொருள். இந்தக் கலையெலாம் கற்றவர் நம் வள்ளல், 3. பொன் செய்யும் ஆற்றலையும் படைத்தவர். அவர் உடம்பில் முகத்தைத் தவிர பல பகுதிகள் பொன் மயமாய் இருந்து ஒளிவீசின என்பதை அவர் காலத்தில் வாழ்ந்தவர் கண்டுள்ளனர். இது அவர் முகத்தைத் தவிர மற்ற இடங்களை மூடி மறைத்திருந்ததாலும் தெரிய வரு