பக்கம்:வள்ளலார் யார்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

வள்ளலார் யார்?


'பொய்வந்த வாயும் புலவந்த செய்கையும்

புன்மைஎல்லாம் கைவந்த நெஞ்சமும் கண்டேன்; இனிகற்

கனிவுடன்யான் மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும்

வீ{று).அன்பிளுல் தைவந்த நெஞ்சமும் காண்ப(து) என்ருே? செஞ்

சடைக்கனியே! செஞ்சடைக்கனி என்று இறைவனேக் குறித் தமைக்கு ஏற்ப, இப்பாடலில் மற்ருேர் உண்மையினே பும் கற்ருேர் உள்ளத்திற்கு விருந்தாகத் தருகின்ருர் வள்ளலார். ஈசனே நேசத்தால் கினேந்து நெஞ்சம் கெக்கு கெக்குருக வேண்டுமாயின் மனத்துய்மை, மொழித் தூய்மை, செயல் துய்மையாகிய மூவகை கலங்கள் அமைய வேண்டும். இவற்றின் குறைகளே ஒன்றன்பின் ஒன்ருகக் களைந்தால்தான் உள்ளம் பத்தி வெள்ளம் தோன்றுவதற்கு இடமாகும். முள் நிறைந்த தோலும், சடை நிறைந்த சதையும், சுவை நிறைந்த சுளேயும் அகற்றியே உள்ளமைந்த கொட்டை யைக் காணுதல் போன்று, மன மொழி மெய்களின் தீமையாகிய முக்குற்றங்களையும் போக்கியே முக்கட் பெருமானே நோக்க முடியும் அதற்கு மேலும் பத்தி யாகிய கத்தி கொண்டே இடையிலுள்ள தீவினைத் திரையைக் கிழித்தல் வேண்டும் என்ற கருத்தையும் வள்ளலார் இங்கு வலியுறுத்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/22&oldid=991832" இலிருந்து மீள்விக்கப்பட்டது