பக்கம்:வள்ளலார் யார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எ. கரை ஏற வழி


தாயின் வயிற்றிலிருந்து குழந்தை தரையில் விழுக் ததுமே குவா குவா என்று கத்தத் தொடங்கி விடுகி றது. அங்கனம் அழவில்லையானுல் அந்தக் குழந்தைக்கு இந்த உலகில் வாழ்வில்லை. ஆகவே உலகிற் பிறந்தார் அனைவரும் துன்பத்தால் உழலவே பிறந்தனர். ஐயோ! இத்துன்பக் கடலில் வீழ்ந்து விட்டோமே! இனி என்று கரையேறப் போகிருேம் ? என்றுதான் பிறந்த குழந் தையும் கதறி அழுகின்றது.

தெய்வப் புலவராகிய திருவள்ளுவர், பிறவியே பெருங்கடல்; அதனே ந்ேதிக் கடந்து கரையேற இறை வன் திருவடியே தெப்பமாகத் துணைசெய்யும்; அத னைப் பற்றுக்கோடாகப் பற்ருதவர் இப்பிறவிக்கடலி னின்று கரையேறவே முடியாது கலங்குவர் என்று கட்டுரைப்பார். - பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவன் அடிசேரா தார் ?? என்பது அவர் வாய்மொழியாகும். இங்ங்ணமே இறை யருள் வெள்ளத்தில் திளைத்த அடியார்கள் அனைவ ரும் பிறவிக் கடலேத் தாண்டப் பெரும்புணையாகத் துணை செய்வது இறைவன் இணையடியே' என்றும் வழிகாட்டியருளினர்.

'மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்’ என்று பாடியருளினர் சுந்தரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/32&oldid=991836" இலிருந்து மீள்விக்கப்பட்டது