பக்கம்:வள்ளலார் யார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை ஏற வழி 器盖

சைவ சமயக்குரவருள் ஒருவரும் எண்பத்தோராண் டுகள் பண்பட்ட சமய வாழ்வு கடத்திய பெருமானும் ஆகிய காவுக்கரசர் பல சமய சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்த கலேவானராக விளங்கினர். ஏதோ ஊழ் வினேப் பயனுல் அவரது உள்ளம் சமண் சமயத்தில் சிறிது சார்ந்தது. அதனுல் சமணம் புகுந்து அச்சமய சாத்திரங்களில் வல்லாராய்ச் சமணர் தலைக்கொண்டு போற்றும் கல்லாராய்த் திகழ்ந்தார். அப்போது இருந்த பல்லவ மன்னனுகிய மகேக் திரவர்மன், காவுக் கரசரை வரவழைத்துத் தருமசேனர் என்று பட்டம் சூட்டி அவரைச் சமண் சமய குருவாகவே மதித்துக் கொண்டாடினன்.

%

வாழையடி வாழையாக வரும் சைவ மரபில் தோன் றிய நாவுக்கரசர் சமண் புகுந்தது கண்டு வருந்திய,அவர் தமக்கையா ராகிய திலகவதியார் திருவதிகை வீரட் டானத்திலுள்ள திருக்கோவிலே அடைந்து, பெருமானே வழிபட்டு முறையிட்டார். பெருமானே! என் தம்பி, சைவம் தழைக்க வாழ வேண்டும் என்பதற்காகவே அடியாள் உயிர் வாழ்ந்தேன். அவன் சமண் புகுந்து விட்டான்; அவனே மீண்டும் சைவம் புகுமாறு செய் தருள வேண்டும் என்று அல்லும் பகலும் ஆண்ட வனே வேண்டி அவ் அம்மையார் பாடுகிடந்தார்.

இங்ங்னம் நாவுக்கரசர் பரசமயப் படுகுழியினின்று கரையேற வழிவகுத்தருள வேண்டுமென வரங்கிடந்த திலகவதியாருக்குப் பெருமான் திருவருள் சுரந்தான். அதன் பயனக நாவுக்கரசரைக் கொடிய குலநோய் வருத்தத் தொடங்கியது. சமண் சமய வல்லார்கள் பலர் அப்பிணியைத் தீர்க்கப் பெருமுயற்சி எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/33&oldid=644409" இலிருந்து மீள்விக்கப்பட்டது