பக்கம்:வள்ளலார் யார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தணிகைக் காதல் 37

கட்டுவிடுமா ? கனவிலேனும் காட்டியருள் என்று வேண்டுகிறேன். ேேயா அதனேக் காட்டுகின்ருயில்லே. இதுதான உன் கருனே ? விண்ணவர்க்கு அரியனுகிய ,ே மண்ணவர்க்கும் நின் புகழ்பாடும் புண்ணியர்க்கும் எளியன் என்றல்லவா எல்லோரும் சொல்லுகின்றனர். வீட்டுலகின் வித்தாய், ஞான விளக்காய், கண்மணியாய் விளங்கும் தணிகை மணியே! நின் பாதமலரைக் கான விழையும் எளியேனுடைய காதலைத் தணித்தருள் வாய் ' என்று உளமுருகிப் பாடும் இராமலிங்கரது அருட்பா, கற்பவர் கேட்பவர்களின் இதயத்தைத் தொடுவதாகும்.

'பண்ண்ேது மொழியடியர் பரவி வாழ்த்தும்

பாதமலர் அழகினேஇப் பாவி பார்க்கில் கண்ணேறு படுமென்ருே கனவி லேனும்

காட்டென்சூல் காட்டுகிலாய் கருணை வீதோ? விண்னேறும் அரிமுதலோர்க்(கு) அரிய ஞான

விளக்கே என் கண்ணே மெய் வீட்டின் வித்தே! தண்ணேறு பொழில்தணிகை மணியே சீவ

சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே'

இவ் அருட்பாவில் இராமலிங்க அடிகளார் அழகிய தொரு தமிழ்ச்சொல்லை எடுத்தாண்டுள்ளார். நம் பழக்கத்தில் கண்திருஷ்டி என்ருெரு சொல் வழங்கி வருகிறது. அதனைக் கண்திருட்டு என்பர் சிலர். வேறு சிலர் அதனைக் கண்ணுாறு என்பர். இவ்வித மெல்லாம் வழங்கும் சொற்களின் கருத்தை கன்கு புலப்படுத்தும் கண்ணேறு என்ற சொல்லே அவர் வழங்கிக் காட்டுகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/39&oldid=644422" இலிருந்து மீள்விக்கப்பட்டது