பக்கம்:வள்ளலார் யார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38

வள்ளலார் யார்?


பொறுமை புள்ளம் கொண்ட பொல்லாத் புல்லர்களின் தீய பார்வை பெருந்தீங்கை விளப்பதைப் பார்க்கிருேம். அதேைலயே ஒரு புலவர், திங்கினர் தம் கண்ணில் தெரியாத தூரத்தே நீங்குவதே நல்ல நெறி' என்று சொல்லி வைத்தார். தியர்களின் கட்டார்வை பிறர்மீது படுவதை ஏறுவது' என்று குறிப்பிடும் கருத்து, முள்ளேறுவதும் நஞ்சேறுவதும் போன்ற கொடுமையுடையது என்பதை வலியுறுத்தும் நோக்காலாகும். பத்திச் சுவை கனிசொட்டச் சொட்ட அருட்பாஅமுதைச் சொரியும் அருட்கொண்டலாகிய வள்ளலார் பெருமான் செந்தமிழ்ப் புலவர்க்கு விருந் தாகவும் ஆங்காங்கே பாங்கான பழந்தமிழ்ச் சொற். களாகிய மணிகளைப் பதித்த வைத்துள்ளார்.

க. தாயனையான்

பெற்றவளுக்குத் தெரியும் பிள்ளையருமை என் பது கல்லாரும் கற்றவரும் சொல்லும் நல்லதொரு பழமொழி. இது தாயின் தலையாய அன்பை இனிது புலப்படுத்துகிறதன்ருே பொல்லாத பிள்ளேயாக இருந் தாலும், தாய் அப்பிள்ளையை வெறுத்துத் தள்ளுவ தில்லை. அதனைப் பிறர் பொல்லாத பிள்ளையென்று சொல்லவும் எள்ளளவும் பொறுப்பதில்லை.

"பொல்லாத சேய் எனினும் தாய்தள்ளல் நீதமோ

புகலிடம் பிறிதும் உண்டோ? - என்று கேட்பார் தாயுமானவர்.

தடித்த பிள்ளையைப் பிடித்துத் தந்தை சினத்துடன் அடிப்பானுயின் அதனே உணர்ந்த தாய் உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/40&oldid=1524289" இலிருந்து மீள்விக்கப்பட்டது