பக்கம்:வள்ளலார் யார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாட்டும் தெருப்பாட்டும் 47

மாணிக்கவாசகர் அருளிய மணிமொழித் திருக் கோவைப் பாட்டையே குறிப்பிட்டார்.

'திரு' என்பது தெய்வத்தன்மை வாய்ந்த பேர முகைக் குறிக்கும். அதுவே என்றும் மாருது நின்று கிலவும் இணையற்ற அழகாகும். அத்தகைய திருவருள் கலங்கனியும் பாட்டே திருப்பாட்டு என்று குறிக்கத் தகும். திருப்பாட்டைத் தருபவர் அருட்கவிஞரே. அன்னவர், இறைவன் புகழையே என்றும் பாடிப்பாடி மகிழ்வர். இறைவன் புகழே பொருள்சேர்ந்த புகழ்ெ னப் போற்றப்பெறும். அவன் புகழைப் பாடுவதே இருள்சேர் இருவினையும் சாராதிருக்கக் காரணமாகும். இந்த உண்மையைப் புலவர்க்கு அறிவுறுத்த விரும்பிய சுந்தரர்,

பொய்ம்மை யாளரைப் பாடாதே எங்தை புகலூர் பாடுமின் புலவிர்காள்!" என்று அறிவுரை வழங்கினர்.

அச் சுந்தரர் உலக மக்களைப் புகழ்ந்து பாடும் புல வர்கள் நிலையைக் கண்டு பெரிதும் வருந்துகிரு.ர். கொடுக்கிலாதானப் பாரியே என்று பாராட்டிக் கூறி லும் கொடுக்கவே மாட்டான். அத்தகையானப் பிக்ழ்ந்து பாடுவதை ஒழித்துப் பரம்பொருளாகிய இறைவனே விரும்பிப் பாடுக அவனைப் பாடினல் இம் ஆமயிலேயே வேண்டும் செல்வத்தை யெல்லாம் வேண்டுமட்டும் கொடுப்பான்:

- 'இம்மையே தரும் சோறும் கடறையும்

ஏத்தலாம் இடர் கெடலுமாம் அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு

யாதும் ஐயுற வில்லையே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/49&oldid=644445" இலிருந்து மீள்விக்கப்பட்டது